ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மகளிர் கூட்டம்

0
167

(வாழைச்சேனை நிருபர்)

தமிழன் என்ற உணர்வு இருக்கத்தான் வேண்டும். உணர்வால் மாத்திரம் எமது வயிற்றை நிறப்ப முடியாது. நமது பிரதேசத்தின் தேவை என்ன, எமக்கு என்ன வேண்டும் என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் எம்மில் அபிவிருத்தியை காண முடியும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சுங்காங்கேணி கிராம சேவகர் பிரிவில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மகளிர் கிளையினை அங்குரார்பனம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘எமது நாடு எமது பிரதேசம் என்று நாம் ஒவ்வொருவரும் சிந்திப்பதன் மூலம்தான் எங்களதும் எங்களது பிள்ளைகளதும் எதிர்காலம் இந்த மண்ணில் சிறந்து விழங்கும். வெருமனே உணர்வுடன் மாத்திரம் எதைப்பற்றியும் சிந்திக்காமல் இருப்பதனால் எம்மில் அபிவிருத்தியை காண முடியாது.

ஒரு சமூகம் தான் சார்ந்துள்ள சமூகத்தை நேசிக்க வேண்டும். அதற்காக தமது பிரதேசத்திற்கு வரும் அபிவிருத்திகளை தட்டிக்கழிப்பதன் மூலம் நாமும் எமது சமூகமும்தான் பின்நோக்கிப் போகிறோம்.’ என்றும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் வட கிழக்கு மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி மார்க்கண்டு தர்மலிங்கம், சுங்காங்கேணி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எம்.கணபதிபிள்ளை பிரதேச மகளிர் என பலரும் கலந்து கொண்டனர்.

2 3 4

LEAVE A REPLY