அமெரிக்காவில் பர்லிங்டன் நகரில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு, ஐந்து பேர் பலி

0
89

_91367722_2அமெரிக்க மாநிலமான வாஷிங்டனில், பர்லிங்டன் நகரத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து நபர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநிலப் போலிசார் கூறியுள்ளனர்.

போலிசார் வணிக வளாகத்திற்கு சீல் வைத்தனர் மற்றும் அந்த வளாகத்தின் உள்ளிருந்தவர்களை வெளியேற்றினர்.

நான்கு பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று முன்னதாக வந்த செய்திகள் கூறின. ஆனால் போலிசார் தற்போது துப்பாக்கிச் சூட்டால் ஏற்பட்ட காயங்களுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஒரு ஆண் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

போலிசார் சந்தேக நபரின் படத்தை வெளியிட்டனர்
போலிசார் சந்தேக நபரின் படத்தை வெளியிட்டனர்

சியாட்டில் நகருக்கு வடக்கே சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்நகரில் சம்பவ இடத்திலிருந்து, கையில் ரைஃபிள் துப்பாக்கியுடன் தப்பிச் சென்ற அந்த சந்தேக நபரை போலிசார் தேடி வருவதாகக் கூறுகின்றனர்.

போலிசார் அந்த துப்பாக்கிதாரியின் சிசிடிவி படத்தை வெளியிட்டுள்ளனர். அந்த நபர் ஹிஸ்பானிக் சமூகத்தைச் சேர்ந்த நபர் என்று அவர்கள் விவரித்தனர்.

Source: BBC

LEAVE A REPLY