(Poem) கிட்னி இழப்பு

0
151

(நிஷவ்ஸ்)

பட்டினியைத் தாங்காது
கிட்னியை இழந்து
பணத்தைப் பெறுவது
பரிதாப இழப்பு.
கிட்ட உள்ளவனின்
கிட்னி பழுதாக
ஒற்றை கிட்னியை
விட்டு-நீ கொடுத்ததால்
கிட்னி இழத்தல்
கொட்டும் நன்மை
கெட்ட உணவு
பட்டைச் சாராயம்
கிட்னியை தாக்கி
சட்னியாய் ஆக்க
கிட்னியை இழப்பது
கெட்ட தலை விதி.
சத்திர சிகிச்சையில்
சதிகாரக் கும்பல்
கிட்னியைத் திருடி
சிட்னிக்கு அனுப்ப,
அப்பாவி கிட்னியை
அறியாமல் இழப்பது
ஒட்டுண்ணி பேய்களின்
கிட்னி யாவாரம்.
ஆனால்
ஆனால்
ஆனால்….
முட்டாள் தனத்தால்
கிட்னியை இழப்பது
கட்டிடம் கட்ட
கிட்னியை இழப்பது
கெட்ட கொள்கைக்காய்
கிட்னியை இழப்பது
………..
இப்படி செய்வதை
எப்படி அழைக்க
சொற்கள் தேடி
சோர்ந்து போனேன்
சிறந்த சொல்லுக்கு
சிறு நீரகம் பரிசு.

LEAVE A REPLY