பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்

0
182

பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானாவோ தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானாவோ தீவில் உள்ள டாவாவோ என்ற இடத்தில் இருந்து கிழக்கே சுமார் 115 கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்கு அடியே சுமார் 69 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 6.53 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.3 அலகுகளாக பதிவானது.

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

-MalaiMalar-

LEAVE A REPLY