மலையில் இருந்து ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் 23 பேர் பலி

0
148

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியின் தலைநகரான முசாபராபாத் நகரில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நவுசேரி மலைப்பாதை வழியாக சுமார் 30 பயணிகளுடன் நேற்றிரவு ஒரு மினிபஸ் சென்று கொண்டிருந்தது.

ஒரு குறுகிய வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், மலைப்பாதையின் ஓரம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்த நீலம் ஆற்றுக்குள் கவிழ்ந்து, விழுந்தது. சுமார் 110 மீட்டர் ஆழத்தில் தலைகுப்புற கவிழ்ந்த பஸ்சுக்குள் இருந்த பயணிகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் 23 பலியானதாகவும், மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY