அதிகாரம் கிடைத்தால் காணிப்பிரச்சினை முற்றும் : ஜனாதிபதியுடன் நாம் பேசவேண்டும் – சபையில் அமைச்சர் நஸீர்

0
767

-சப்னி அஹமட்-

கிழக்கு மாகாண சபைக்கு காணி அதிகாரம் தரும் வரை கிழக்கு மாகாண எல்லைக்குட்பட்ட காணிப்பிரச்சினைகளை எம்மால் தீர்க்க முடியாது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் 63வது சபை அமர்வு நேற்று (22) இடம்பெற்ற போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலையரசன் அவர்களினால் கொண்டுவரப்பட்ட பிரேரனைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

கிழக்கு மாகாண சபைக்குட்ட மாவட்டங்களில் காணப்படுகின்ற காணி தொடர்பான பிரச்சினைகளை கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இந்த கெளரவமான சபையில் தவிசாளர் ,முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களினால் பேசப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இதுவரை இதனை இந்த சபையினால் நிறைவேற்ற முடியாமலயே உள்ளது.

இதன் நாம் தீர்க்க வேண்டும் என்றால் கிழக்கு மாகாணத்தினுடைய அதிகாரம் எமக்கு கிடைக்கப்பெறுகின்ற போதே இதனை நாம் முற்றுமுழுதாக தீர்க்க முடியும். இந்த சபையில் உள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் பிரதிநிதிகளும் இது தொடர்பாக அடிக்கடி பேசுகின்றார்கள்.

இவ்வாறு பேசுவது மக்கள் பிரதிநிதிகள் என்றவகையிலையே, இது மக்களின் அன்றாட வாழ்க்கைப்பிரச்சினை இதனை தீர்க்க நாம் முடிந்தவரை முயற்சி செய்யவேண்டும் அதுபோல் கிழக்கு மாகாண காணி அமைச்சர் உட்பட அனைவரும் முன்வந்து இதற்கான தீர்வினை பெற நாம் ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கையை நாம் மேற்கொண்டு அவற்றை தீர்க்க முடியுமானால் அது மத்திய அரசின் அனுமதி எப்போது கிடைக்கின்றதோ அப்போதே தீர்க்க முடியும் எமது மாகாணத்திற்கான அதிகாரம் கிடைக்கின்ற போது நாம் எமது மாகாணத்தினுள் இருக்கின்ற காணிப்பிரச்சினைகளை இனங்கண்டு அதனை தீர்க்க முற்படலாம். இதற்கான நாம் இந்த நாட்டின் ஜனாதிபதியின் பேசி இதனை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இது மாத்திரம் இன்றி அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குற்பட்ட அஷ்ரப் நகர் பிரதேசத்தில் இராணுவ முகாம் ஒன்று உள்ளது அது பற்றி 2008ஆம் ஆண்டு முதல் இங்குள்ளவர்களினால் பேசிவருகின்றனர்.யுத்த காலத்தில் இல்லாத குறித்த முகாம் யுத்ததிற்கு பின்பும் உள்ளது இவ்வாறு அந்தக்காணியும் இதுவரையும் விடுபடாதுள்ளது.

இது போல் தான் இந்த மூன்று மத மக்களின் காணிகளும் இதுவரை மீட்கப்பாமால இன்னல்களை மக்கள் அனுபவித்துவருகின்றனர். ஆகவே நாம் இது பற்றி விரிவான ஓர் ஆலோசனையை ஜனாதிபதியும் எமது சபை பேசி எமது அதிகாரத்தை பெறுவதன் மூலம் காணிப்பிரச்சினைகளை தீர்க்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY