தகவலரியும் உரிமை அனைவருக்கும் உரித்துடையது:புஷ்ப குமார

0
400

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

ஜனநாயக நாட்டில் இந்த நல்லாட்சி அரசில் தகவல்களை அறியும் சட்டமானது வரவேற்கத் தக்கது இதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய கடப்பாடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இருக்கிறது.

திருகோணமலை மாவட்டத்தில் சுமார் நான்கரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காணப்படுவதுடன்20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களும் இருப்பதை காணமுடிகிறது. இவர்களுக்கான சரியான தகவல்களை கொண்டு சேர்ப்பதும் உங்களுடைய கடமையாகும் என இன்று(23) தகவலரியும் சட்டம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வின் போதே இவ்வாறு திருகோணமலை மாவட்ட அரச அதிபர் என்.எம் .புஷ்பகுமார தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், பிரதமர் நாட்டின் ஜனாதிபதி உட்பட தகவல்களை அறியும் சட்டங்களை அனைத்து மக்களும் சாதாரன பிரஜையும் அறிந்து கொள்வதற்கான வழி வகைகளை அமைத்துத் தந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியதாகும். இதனால் அனைவரும் உரிமைகளை அனுபவிக்க உரித்துடையவர்களாகவும் காணப்படுவது நாட்டின் ஜனநாயக உரிமைகளுக்கு வலுச்சேர்க்கின்றது எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY