தெற்காசிய நாடுகளில் குறைந்தளவில் எயிட்ஸ் பரவும் நாடு இலங்கை

0
186

அனைத்து எச்ஐவி தொற்றுள்ள நோயாளர்களுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால கூறினார்.

குடும்ப சுகாதார பணியகத்தில் இன்று(22) இடம்பெற்ற எயிட்ஸ் நோய் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியல் சந்திப்பு கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டார்:

தெற்காசிய நாடுகள் வரிசையில் குறைந்தளவில் எச்.ஐ.வி பரவும் நாடாக இலங்கையுள்ளதாகவும் 0.1 சதவீத அளவிலேயே இலங்கையில் எச்.ஐ.வி தொற்று காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது நாட்டில் 2,436 எச்ஐவி நோயாளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எய்ட்ஸ் நோயை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதுடன், அதற்கான வேலைத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்காக 30 சிகிச்சை மத்திய நிலையங்கள் சுகாதார அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பாலியல் விடயங்கள் தொடர்பாக மக்கள் அறிவூட்டப்பட வேண்டும் என்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால மேலும் கூறினார்.

எச்.ஐ.வி நோய் தொற்றுதல் குறித்து அறியாமை மற்றும் முன்கூட்டியே அறிந்துகொள்வதில் ஏற்படும் தாமத நிலை நோய் முதிர்ச்சியடைவதற்கான அடிப்படை காரணிகள் என அவர் குறிப்பிட்டார்.

எயிட்ஸ் நோயை உண்டாக்கும் மிக நுண்மையான எச்.ஐ.வி வைரஸ் உடலிள்ள ஒருகலத்துக்குள் நுழைந்து பின்னர் அவை முதிர்ச்சியடையும் வரை வெளிப்படுவதில்லை.

பலமடைந்து பெருக ஆரம்பித்ததும் மிக வேகமாக செயல்படுவதால் இதன் தாக்கமும் அதிகமாகவே இருக்குமென அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

-Enkal Teasam-

LEAVE A REPLY