மை தானத்தை பெற்றுத்தருமாறு கோரி வீதியை மறித்து போராட்டம்

0
130

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சூரங்கல் கிராமத்தில் கொழும்பு பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்களது பகுதிக்கு சொந்தமான மைதானத்தில் சட்டவிரோத குடியயேற்றம் ஏற்றப்பட்டுள்ளமையை கண்டித்து பாரிய மக்கள் போராட்டத்தை நடாத்தினர் இதன் போது மீளவும் மைதானத்தை பெற்றுத்தருமாறும் மகஜர் அடங்கிய கடிதத்தை கிண்ணியா பிரதேச செயலாளர் திரு.அனஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

unnamed-7பல காலமாக மைதானம் இன்மையால் தமது பகுதியினுடைய இளைஞர்களின் விளையாட்டு திறமை மழுங்கடிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

மைதானத்தை திருப்பிக்கொடு என்ற சுலோகங்களை ஏந்தியவாறும் குறித்த மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இது தொடர்பாக பிரதேச செயலாளர் இது சம்பந்தமான நடவடிக்கைககளை மேற்கொள்வதாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

LEAVE A REPLY