எகிப்து அகதிகள் படகு விபத்தில் பலி எண்ணிக்கை 350 ஆக உயர்வு

0
172

எகிப்தில் இருந்து இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிக் கொண்டு ஒரு படகு புறப்பட்டது. அதில் 450 முதல் 600 பேர் வரை இருந்தனர். இப்படகு எகிப்து கடற்பகுதியில் வந்த போது கடலில் மூழ்கியது.

அதுபற்றி தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் படகுடன் விரைந்து சென்றனர். அவர்களில் 163 பேரை மட்டுமே மீட்க முடிந்தது.

படகு கடலில் மூழ்கியதில் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 51 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே உயிருடன் மீட்கப்பட்டவர்கள் போலீஸ் பாதுகாப்பில் உள்ளனர். இத்தாலிக்கு வேலை தேடி சென்ற போது விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைய அகதிகளாக வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போது மத்திய தரைக்கடலில் படகு மூழ்கி பலியானோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

2014-ம் ஆண்டு முதல் இதுவரை மத்திய தரைக் கடலில் மூழ்கி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

-Malai Malar-

LEAVE A REPLY