கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சர்கள் உச்ச அதிகாரத்தினைப் பயன்படுத்த வேண்டும்: எம்.எஸ்உதுமாலெப்பை

0
208

கிழக்கு மாகாணத்தில் தீர்க்கப்படாமலுள்ள காணிப்பிரச்சிணைகளுக்கு தீர்வு காண்பதற்கு கிழக்குமாகாண சபையும், அமைச்சர்களும் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கிழக்கு எதிர்க்கட்சித் தலைவர்எம்.எஸ் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் 63வது அமர்வு தவிசாளர்சந்திரதாச கலபெதி தலைமையில் (22) நேற்று நடைபெற்றது. இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலையரசன்சம்மாந்துறை தொட்டாஞ் சுருங்கி புதுக்காடு விவசாயக்காணிகளை உரியவர்களுக்கு வழங்க வேண்டும் எனசமர்ப்பித்த தனிநபர் பிரேரணையிலே கலந்துகொண்டுஉரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதிகளின் நிருவாகம் முன்னாள்முதலமைச்சர் எஸ். சந்திரகாந்தன் தலைமையில் 2008-2012ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து2012-2015ஆம் ஆண்டு வரை முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏமஜீத் தலைமையில் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டிலிருந்து தற்போதைய முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் தலைமையில்மாகாண சபையில் நிருவாகம்நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

கிழக்கு மாகாண மக்களின் காணிப்பிரச்சிணைகளுக்கு எந்தக்காலத்தில் தீர்வு காணப்பட்டது என்று கிழக்கு மாகாண மக்கள்ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். எனவே கிழக்கு மாகாணத்தில்நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள காணிப்பிரச்சிணைகளை அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வுகான்பதற்கு கிழக்கு மாகாண சபைமுன்வரவேண்டும்.

நமது நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாகாணசபைகளுக்கு காணி , பொலிஸ் அதிகாரங்கள் வழங்கவேண்டும் என்ற நிலைப்பாடு உருவாகி வரும்இக்காலகட்டத்தில் மாகாண காணி அமைச்சுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி கிழக்கு மாகாண காணிப்பிரச்சிணனகளுக்கு தீர்வு கானவேண்டும்.

மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கம் என்று பிரித்து நமது கிழக்கு மாகாண மக்களின் காணிப்பிரச்சினைகளை இழுத்தடிப்பு செய்யாமல் கிழக்கு மாகாணத்தில் இதுவரைதீர்க்கப்படாமல் உள்ள காணிப்பிரச்சினைகள் தொடர்பானசரியான புள்ளி விபரங்களுடன் கிழக்கு மாகாண காணிஅமைச்சு திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் இது வரை தீர்க்கப்பட்ட காணிப்பிரச்சினைகள், தற்போது தீர்க்கப்படாமல் உள்ள காணிப்பிரச்சினைகள் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்தவேண்டும்.

கிழக்கு மாகாணதாதில் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்கள்பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு புரிந்துணர்வுடன்செயற்பட்டு காணிப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப்பெறுவதற்கு முயற்ச்சி செய்வதன் ஊடாக கிழக்கு மாகாணத்தில் இன ஒற்றுமையை வளர்த்தெடுக்க முடியும். தற்போது நாம் கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலத்தில்இறுதிக்கட்டத்தில் இருந்துகொண்டிருக்கின்றோம்.

அடுத்த வருட முற்பகுதியில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலைநடாத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்அண்மையில் தெரிவித்தள்ளார். குறிப்பாக இக்கால கட்டத்தில்கிழக்கு மாகாண சபையிலே அதிகாரத்திலிருக்கும்அமைச்சர்கள் உச்ச அதிகாரத்தினைப் பயன்படுத்திமக்களுக்காக சேவையாற்ற முன்வர வேண்டும் .

நாம் இன்னும் சில மாதங்களில் முன்னாள்அமைச்சர்களாகவும், முன்னாள் மாகாண சபைஉறுப்பினர்களாகவும் மாறப்போகின்றோம் என்பதனை மனதில்வைத்துக்கொண்டு கிழக்கு மாகாண மக்களின் நலன்களில்அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அடுத்தவருடம் அமையவுள்ள கிழக்கு மாகாண சபையில் யார்முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் என்பதுஇறைவனின் நாட்டப்படியே நடைபெறும்.

இன்றைய மாகாண சபை அமர்வின் போது ஆளுங்கட்சி உறுப்பினர்களிடையே புரிந்துணர்வுயின்மை காரணமாககருத்து மோதல்கள் இடம்பெற்றதனையும் அவதானிக்கமுடிந்தது. ஆளுங்கட்சி உறுப்பினர்களிடையே இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவது கவலை அளிக்கிறது, குறிப்பாக கிழக்கு மாகாண மக்களினுடைய பிரச்சினைகளைமக்கள் பிரதிநிதிகளால் சபையில் சமர்ப்பிக்கின்ற போது துறைசார்ந்த அமைச்சர்கள் சபையில் இருந்து அவ்விடயங்களைகவனத்திற் கொள்ள வேண்டும்.

மக்களின் பிரச்சினைகள்சபையில் சமர்ப்பிக்கப்படுகின்ற போது துறைசார்ந்த அமைச்சர்கள் சபையில் இல்லாமை கவலையான விடயமாகும்எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY