கரடிக்குளி மாணவர்களின் வரலாற்றுச் சாதனை

0
363

கரடிக்குளி கிராமம் மன்னார் மாவட்டத்திலேயே சகல துறையிலும் பின்னடைவான கிராமமாகும்.இருப்பினும் கல்வித் துறையில் இக்கிராமம் தடம் பதிக்கத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியான விடயமாகும்..

இவ்வூரைச் சேர்ந்த பலர் கல்வித்துறையில் முன்னேறிவருவது இவ்வூரைச் சேர்ந்தவர்களை ஆரவாரம் அடையச் செய்துள்ளது. கடந்த ஆண்டு இவ்வூரைச் சேர்ந்த 7 பேர் கலை மாணிப்பட்டத்தைப் பெற்றுத் தேர்ந்ததை முன்னிட்டு இக்கிராமம் விளாக் கோலமே பூண்டது. இவ்வாண்டு பல்கலைக் கழக ஆணைக் குழு வெளியிட்ட பட்டியலின் பிரகாரம் இவவூரைச் சேர்ந்த 3 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.

  1. முத்து முஹம்மத் றுஸ்னா – முகாமைத்துவ துறை யாழ்பாணம்பல்கலைக் கழகம்
  2. அப்துல் ஹலீம் ஹஸ்ஸான்- முகாமைத்துவ துறை,பேராதெனியபல்கலைக் கழகம்
  3. நஸீம் பாதிமா நப்fரா – கலைத்துறை, தென்கிழக்குப் பல்கலைக் கழகம்.

உயர் கல்வியை நோக்கிய இப்பாய்சல் இக்கிராமம் சகல துறையிலும் இறை அருளால் முன்னேறப் போகின்றது என்பதற்கான சுப செய்தியாகவே அமைகின்றது. எமக்கு பெருமை சேர்த்த இம்மாணவர்களை என் கிராமம் சார்ந்தவர்கள் சார்பாக வாழ்த்துவதில் நான் பேரானந்தம் அடைகின்றேன். வாழ்க, வளம் பெறுக.

LEAVE A REPLY