ஏறாவூர் படுகொலைச் சந்தேக நபர்கள் அறுவருக்கும் விளக்க மறியல்

0
8314

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவந்த சந்தேக நபர்கள் ஆறு பேரும் இன்று (23) வெள்ளிக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது அவர்களை எதிர்வரும் ஒக்ரோபெர் 05ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 சந்தேக நபர்களும் இன்று நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட 32 வயதுடைய பெண்ணினது கணவரின் சகோதரன் ஏற்கெனவே 14 நாட்கள் விளக்கமறியலில் இருந்த நிலையில் அவரும் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது உஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெஸீரா பானு மாஹிரும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.09.2016) மீட்கப்பட்டன.

ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புட்ட சான்றுப் பொருட்களை அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்குச் அனுப்பி வைப்பதற்காக இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் அப்பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

பொலிஸார் மற்றும், மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் ஆகியோரால் 17 சான்றுப் பொருட்கள் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைப்பதற்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

eravur-court

eravur-murder-accused-2 eravur-murder-accused-1

eravur-murder-accused-3

LEAVE A REPLY