கசப்பான சம்பவங்களை மறந்து மீண்டும் எம்முடன் இணையுங்கள்: முஸ்லிம்களுக்கு மஹிந்த அணியிடமிருந்து அழைப்பு

0
426

முஸ்­லிம்கள் கடந்த கால கசப்­பான சம்­ப­வங்­களை மறந்து எம்­முடன் ஒன்று சேருங்கள். நாம் அமைக்­க­வுள்ள ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்குப் பாது­காப்பும் ஏனைய சமூ­கங்­களைப் போல் சகல உரி­மை­களும் வழங்­கப்­படும் என மஹிந்த தரப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

நேற்றுக் காலை பத்­த­ர­முல்லை, நெலும்­பொக்­குன மாவத்­தை­யி­லுள்ள இணைந்த எதிர்க்­கட்­சி­யி­னரின் அலு­வ­ல­கத்தில் மஹிந்த அணி ஆத­ரவு முஸ்லிம் பிர­மு­கர்கள் கலந்­து­கொண்ட கூட்­ட­மொன்று நடை­பெற்­றது. நிகழ்­வுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷ தலைமை வகித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை ஆத­ரிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கான முஸ்லிம் பிரி­வொன்­றினை ஆரம்­பிப்­பது பற்றி கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. அப்­பி­ரி­வுக்கு முஸ்லிம் முற்­போக்கு முன்­னணி எனப் பெய­ரி­டு­வ­தெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இக்­கூட்­டத்­திற்கு தலைமை வகித்து உரை­யாற்­று­கை­யி­லேயே பசில் ராஜபக்ஷ மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
நாம் அமைக்கும் கட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான எந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது கடந்த காலங்­களில் எமது ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சில சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. இதை நாம் ஏற்­றுக்­கொள்­கிறோம். அவற்றை முஸ்­லிம்கள் மறந்­து­விட வேண்டும் என்றார்.

நிகழ்வில் கலந்­து­கொண்ட முஸ்லிம் பிர­தி­நி­திகள் தற்­போது நடை­பெற்­று­வரும் நல்­லாட்­சியில் பொரளை முதல் அனு­ரா­த­புரம் வரை 22 பள்­ளி­வா­சல்­க­ளுக்கு சவால்கள் விடப்­பட்­டுள்­ளன.

சில தாக்­கப்­பட்­டுள்­ளன. மஹி­யங்­கனை பள்­ளி­வாசல் பிரச்சி­னைக்கு இது­வரை தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை.

இஸ்லாம் பாடம் போதிப்­ப­தற்கு ஆசிரிய வெற்­றி­டங்கள் நில­வி­னாலும் மௌலவி ஆசி­ரிய நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை. முஸ்லிம் பாட­சா­லைகள் நிர்­மா­ணிப்­ப­தற்கு காணி வழங்­கு­வ­தற்கு மறுப்புத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது என்னும் முறைப்­பா­டு­களை முன்­வைத்­தனர்.

‘முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் அனைத்­துக்கும் தீர்வு வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும். முஸ்­லிம்கள் அனை­வரும் வேறு­பா­டு­களை மறந்து மஹிந்த ராஜபக் ஷவின் பக்கம் ஒன்­று­சேர வேண்டும் என பசில் ராஜபக் ஷ வேண்டிக் கொண்டார்.

இதே­வேளை, மஹிந்த ஆத­ரவு அணியின் முஸ்லிம் பிரி­வான முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியை எதிர்­வரும் அக்­டோபர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பித்து வைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

எதிர்வரும் 5 ஆம் திகதி பத்தரமுல்லையிலுள்ள இணைந்த எதிர்க்கட்சியினரின் காரியாலயத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

Source: Vidivelli

LEAVE A REPLY