பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள்: முதல் இருபது 20 போட்டி இன்று ஆரம்பம்

0
295

பாகிஸ்­தா­னுக்கும் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கும் இடை­யி­லான சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடர் நடு­நி­லை­யான ஐக்­கிய அரபு இராச்­சிய மைதா­னத்தில் இன்று ஆரம்­ப­மா­கின்­றது.

மூன்று போட்­டி­களைக் கொண்ட தொடரின் முத­லா­வது போட்டி இன்றும் இரண்­டா­வது போட்டி நாளையும் துபாயில் நடை­பெ­ற­வுள்­ளது.

கடைசிப் போட்டி அபுதாபியில் செவ்­வா­யன்று நடை­பெ­ற­வுள்­ளது.
தனது தத்­தெ­டுப்பு மைதா­னங்­களில் விளை­யாடும் பாகிஸ்தான் இத் தொடரில் சார்வ்ராஸ் அஹ்மத் தலை­மையில் வெற்­றி­பெ­று­வ­தற்­கான முஸ்­தீபில் இறங்­க­வுள்­ளது.

சர்­வ­தேச கிரிக்கெட் விளை­யாடும் நாடுகள் பயங்­க­ர­வாத தாக்­குதல் கார­ண­மாக பாகிஸ்தான் செல்ல மறுப்­பதால் இத் தொடர் நடு­நி­லை­யான ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் நடை­பெ­று­கின்­றது.

மேற்­கிந்­தியத் தீவுகள் மூன்று புதிய வீரர்­க­ளுடன் இத் தொடரை எதிர்­கொள்­ள­வுள்­ளது.

இந்த இரண்டு நாடு­களும் 2011 முதல் நான்கு சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யாடி தலா இரண்டு வெற்­றி­களை ஈட்­டி­யுள்­ளன.

பாகிஸ்தான் குழாம்
சார்வ்ராஸ் அஹ்மத் (தலைவர்), பபார் அஸாம், ஹசன் அலி, இமாத் வசிம், காலித் லத்திவ். மொஹமத் ஆமிர், மொஹமத் நவாஸ், மொஹமத் ரிஸ்வான், ரும்மான் ராயீஸ், சாத் நசிம், ஷார்ஜீல் கான், ஷொயெப் மாலிக், சொஹெய்ல் தன்விர், உமர் அக்மால், வஹாப் ரியாஸ்.

மேற்­கிந்­தியத் தீவுகள் குழாம்
கார்லோஸ் ப்ரத்வெய்ட் (தலைவர்), சமுவெல் பத்ரி, ட்வேன் ப்ராவோ, ஜோன்சன் சார்ள்ஸ், அண்ட்றே ப்ளெச்சர், ஜேசன் ஹோல்டர், எவின் லூயிஸ், சுனில் நரின், கீரொன் பொலார்ட், நிக்­கலஸ் பூரன், ரொவ்மன் பவல், மார்லன் சமுவெல்ஸ், ஜெரோம் டெய்லர், சத்விக் வோல்டன், கெஸ்ரிக் வில்லியம்ஸ், அண்ட்றே ரசல்.

Source: Metronews

LEAVE A REPLY