உலகிலேயே அதிகமானோர் பரீட்சைக்கு தோற்றும் நாடு இலங்கை – பரீட்சைகள் ஆணையாளர்

0
171

இம்முறை நடைபெறவுள்ள சாதாரணதரப் பரீட்சைக்கு வரலாற்றில் என்றுமில்லாதவாறு 7 இலட்சத்து பதினைந்தாயிரத்துக்கு அதிகமான மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் வரலாற்றில் இம்முறையே அதிகமான மாணவர்கள் தோற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் மக்கள்தொகை விகிதத்தின் அடிப்படையில் உலகிலேயே அதிகமானோர் பரீட்சைக்கு தோற்றும் நாடு என்ற கௌரவம் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் டிசம்பர் 6ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு, பரீட்சையானது புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறவுள்ளதாகவும், பழைய பாடத்திட்டத்தின் படி 3,34,781 மாணவர்களும், புதிய பாடத்திட்டத்தின் படி 381,184 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

-Enkal Tesam-

LEAVE A REPLY