அம்பியுலன்ஸ் இல்லாததால் கர்ப்பிணி மனைவியை சுமந்து சென்ற கணவர்

0
322

உரிய நேரத்தில் அம்பியுலன்ஸ் வராததால் பிரசவ வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணி மனைவியை, அவரது கணவன் தோளில் சுமந்து சென்ற சம்பவம் ஒடிசாவில் அரங்கேறி உள்ளது.

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது.

இங்குள்ள கல்யாண்சிங்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பாரு பிராஸ்கா; இவரது மனைவி பங்காரி. கர்ப்பிணியான பங்காரிக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், அவரது கணவர், ‘108’ அம்பியுலன்ஸ் சேவைக்கு போன் செய்தார். பலமுறை போன் செய்தும் அம்பியுலன்ஸ் வராததால், பிரசவ வலியால் துடித்த பங்காரியை, அவரது கணவர், தன் தோளில் சுமந்து, 1 கி.மீ. துாரத்தில் உள்ள, சமூக சுகாதார மையத்திற்கு அம்புலன்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றார்.

அங்கும் அம்புலன்ஸ் கிடைக்காததால் சுகாதார மையத்திற்கு அருகில் உள்ள மருத்துவமனை வரை தோளில் சுமந்து சென்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பங்காரி க்கு ரத்த சோகை நோய் உள்ளதாக கூறிய டாக்டர்கள், அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம்,சமூக வலைதளங்களில்

வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நோய்வாய்ப்பட்டு இறந்த தன் மனைவியின் உடலை அம்பியுலன்ஸ் வசதி கிடைக்காததால் ஒருவர் தன் தோளில் சுமந்து சென்ற சம்பவம் சமீபத்தில் ஒடிசாவில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

Source: Thinakaran

LEAVE A REPLY