(Video & Photos) அளுத்கமயில் முஸ்லிம் வர்த்தகரின் ஆடை நிலையம் எரிந்து நாசம்; அதிர்ச்சியில் ஒருவர் வபாத்

0
799

whatsapp-image-2016-09-23-at-05-50-31-12014ம் ஆண்டு வன்முறையின் போது தாக்குதலுக்குள்ளான மூன்று மாடிகளைக் கொண்ட பாரிய ஆடை வர்த்தக நிலையமான அளுத்கம ”மல்லிகாஸ்” நேற்றிரவு தீ பிடித்து எரிந்துள்ளது!

காரணம் உடனடியாக தெரியாதபோதிலும் இது ஒரு தாக்குதலாக இருக்கலாம் என மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்ற போதிலும் அது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

அழுத்கம மற்றும் தர்கா டவுன் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது!

இதேவேளை இந் நிறுவனம் தீக்கிரையாகியுள்ள நிலையில் அதனருகில் இயங்கும் அஸ்மாஸ் எனும் நிறுவனத்தின் உரிமையாளரின் மைத்துனரான ஹில்மி (மிஹிரிபென்ன) என்பவர் சம்பவ இடத்தில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் வைத்து வபாத்தாகியுள்ளார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவர் இதற்கு முன்னரும் இரு தடவைகள் மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

whatsapp-image-2016-09-23-at-05-50-31-2 whatsapp-image-2016-09-23-at-05-50-31-3 whatsapp-image-2016-09-23-at-05-50-31-4 whatsapp-image-2016-09-23-at-05-50-31

LEAVE A REPLY