தேசிய தலைவர் ரவூப் ஹக்கீமுடனான இரு நாள் அனுபவப் பகிர்வு

0
302

(முஹம்மது ரணூஸ்)

ஒரு மனிதனைப் பற்றி அறிய அவனுடன் ஒரு பயணம் சென்று பாருங்கள் என்பார்கள். அப்படி ஒரு மனிதருடன் இரண்டு நாள் பயணம் சென்றிருந்தேன். அவர் வேறு யாருமல்ல ஸ்ரீ லங்கா முஸ்லிம்காங்கிரஸின் தலைவர் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம்.

அவர் பற்றிய எனது மனப் பதிவுகள் நன்றாகவே இருந்தது. ஆனால் இந்தப் பயணத்தின் பின்னர் அப்பதிவுகளை மேலும் உறுதிப்படுத்த மிகச் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்தது.

நடைமுறை அரசியல் வாதிகள் மது மாது கொலை கொள்ளை ….இப்படிப் பஞ்ச மாபாதகங்களை செய்து கொண்டு தலைவர்களாக தங்களைத் தாங்களே அழைத்துக் கொண்டு திரியும் இக்காலத்தில் நிறைந்த தலைமைத்துவப் பண்புகளுடன் வலம் வரும் ஒரு மனிதனை தலைவனாகப் பெற்றிருப்பது இலங்கை முஸ்லிம்களுக்கு கிடைத்த பேரதிஷ்டம் எனலாம்.

இறைமறுப்புக்கு கட்டளையிடாத வரை இரு இஸ்லாமிய தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்பது எனது புரிதலாகும். ஏனெனில் இஸ்லாத்தில் சமூக ஒற்றுமை மிகப் பெரும் கடமை என்பதும் எனது நம்பிக்கை.

இன்று சில்லரைக் காரணங்களுக்காக கட்சி துவங்கிக் கொண்டு சமூகத்தைப் பிளவுபடுத்தும் அரசியல் வியாபாரிகளுக்கு மத்தியில் ரவூப் ஹக்கீமினது தலைமை என்னைப் பொறுத்தவரையில் சாலச் சிறந்தது.

தலைவர் அவர்களது நுவர எலிய மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வீட்டுக்கு வீடு மரம் நடுகை நிகழிவுகளில் பங்கெடுப்பதும் கலந்துரையாடலுக்குமாகவே நான்  உட்பட சில கட்சி முக்கியஸ்தர்களும்  அழைக்கப் பட்டிருந்தனர்.

கடும் குளிர் …இருந்த போதும் அதிகாலையில் எழும்பவே முடியவில்லை…என்னால் மட்டுமல்ல அதிகமான சகோதரர்களால்.

அன்றைய பயணக் களைப்பு வேறு …….

பரிச்சயமில்லாத அந்தக் குளிருக்கு ஈடு கொடுத்து அதிகாலையில் எழும்ப முடியவில்லை…எல்லோரும் தூக்கம்..அந்தக் குழுவில் அதிகாலையில் எழும்பி சுபஹ் தொழுத மிகச் சிலருள் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் ஒருவர் என்பது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இத்தனைக்கும் அவர் நள்ளிரவு தாண்டி ஏறத்தாழ இரண்டு மணியளவிலேயே தூங்கப் சென்றார்.

அதிகாலையில் தொழுத முகத்துடன் அவர் சொன்ன அந்த ஸலாத்தின் அழகுக்கு அந்த ரோசாப்பூக்கள் நாணித்துப் பதிலளித்திருக்க வேண்டும் அவ்வளவு அழகு…அல்ஹம்துலில்லாஹ்…!

லுஹரைத் தொழுதவுடன் உடனடியாக இமாமத் கொடுத்து அஸஹரை சேர்த்துத் தொழுதவித்த பொது நான் கண்கள் பனித்துக் கொண்டேன்..!

ஜோர்டான் நாட்டுக் காரி ஒருவரைத் தன்னுடன் அழைத்து வந்து நுவர எலிய நகரப் பள்ளிகளில் அவரை குரானை ஓத வைத்து அதனை அவர் உளமுருகிச் செவிமடுத்த விதம் அவரது இறையச்சத்தை எனக்குப் புலப்படுத்தியது.

உணவு உண்ணும் போது மிகவும் பக்குவமாகவும் மீதமின்றியும் அதே வேளை எல்லோரும் உண்ணும் உணவையே தானும் உண்டு எல்லோருடனும் அமர்ந்து தானும் உண்டு தனது பாத்திரத்தை தானே கழுவி எல்லோருடனும் வரிசையில் நின்று தானும் கை கழுவி ….இப்படி அவரது குணாதிசயங்கள் நீண்டு இருந்தது.

கோபமே வராத ஒரு குணம் அவருடையது.அதனால்தான் போலும் சிலர் இந்த நல்ல தன்மையினை பிழையாக பயன்படுத்த முனைகின்றனர்.

தன்னோடு கடுமையாகப் பேச முனைந்த ஒருவனைப் பார்த்துப் புன்னகையுடன் சுகம் விசாரித்த அவர் குணத்தின் அழகை என்னவென்பது.

என்னைப் பொறுத்தவரை தலைமைத்துவத்துக்குப் பொருத்தமான தலைவர் சமகாலத்தில் ரவூப் ஹக்கீம்  என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.

நிறைந்த அறிவு,பொறுமை,சமூக உணர்வு, நிதானம், புத்திசாலித்தனம், புன்சிரிப்பு, அனுபவம், மொழிப்புலமை…..இப்படி நிறைந்த பண்புள்ள மனிதர் தலைவராக இருப்பது நமக்குத் பெருமைதான்.

LEAVE A REPLY