”எழுக தமிழ்” மக்கள் பேரெழுச்சி ஏற்பாடு

0
196

(அப்துல்சலாம் யாசீம்-)

ஈழத்தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளுள் மிகமுக்கியமான ”இனப்பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு தீர்வு” தர சிங்கள அரசானது முயற்சிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அத்தீர்வானது தமிழ் மக்கள் பேரவையால் முன்மொழியப்பட்ட வகையில் அமைந்திருக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்துவதுடன், சிங்கள பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும், காணி அபகரிப்பிற்கு எதிராகவும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், காணாமலாக்கப்பட்டோருடைய உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோரியும் எதிர்வரும் 24ம் திகதி யாழ்ப்பாணத்தில் மக்கள் பேரெழுச்சி நிகழ்வாக ”எழுக தமிழ்” நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கு திருகோணமலை மாவட்டத்தின் அனைத்துப் பொது அமைப்புக்களும், தமிழ் மக்களும் ஆதரவை வழங்குவதுடன், பங்களிப்பையும் வழங்குமாறு தமிழ் மக்கள் பேரவையின் சார்பில் திருகோணமலை மாவட்டத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுக்கின்றது.

தமிழர்கள் தமக்கு என்ன தேவை என்பதை மீண்டும் ஒருமுறை உலகிலுள்ள அனைவருக்கும் தெரிவிக்கும் வாய்ப்பை இந் நிகழ்வு எமக்கு வழங்கியுள்ளது. அவ்வாய்ப்பைப் பயன்படுத்துவது திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். எனவே இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு நாம் உரிமையுடன் அழைக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனி அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளர் இரா.சிறீஞானேஸ்வரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY