யார் இந்த ரவுப் ஹக்கீம்?

0
386

(முகம்மத் இக்பால்)

நுவரெலியா மாநகர எல்லைக்குள் மு. கா. தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் மரம் நடும் நிகழ்ச்சித்திட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். அதற்காக நுவரெலியாவில் தலைவருடன் ஒரே இல்லத்தில் இரண்டு நாட்கள் தங்கவேண்டி ஏற்பட்டது. இதனால் ஆச்சரியப்படக்கூடிய சில பண்புகளை தலைவரிடத்திலிருந்து நான் கற்றுக்கொண்டேன்.

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையை எவ்வளவு இன்பமாகவும், சந்தோசமாகவும், நின்மதியாகவும் அனுபவிக்கும்போது தலைவர் ஒவ்வொரு நிமிடத்தினையும் மக்களுக்காக எந்தளவு சிரமமாக கழிக்கின்றார் என்பது அருகில் இருந்து அவதானித்தால் மட்டுமே புரியும்.

கட்சி முக்கியஸ்தர்களினாலும், போராளிகளினாலும் நாட்டின் நாலா பக்கத்திலிருந்தும் தலைவருக்கு வருகின்ற தொலைபேசி அழைப்புக்கள் ஏராளம். அவைகளுக்கு பதில் வழங்கிவிட்டு, பல பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்குவது என்று நல்லிரவு தாண்டுகிறது.

அதன்பின்பு தூங்க சென்று சில மணிநேரங்கள் மட்டுமே ஓய்வு. மீண்டும் தன்னை படைத்த அல்லாஹ்வை வணங்கும் பொருட்டு “தஹஜ்ஜத்” தொழ எழும்பி, தொழுதபின்பு “சுபஹு” தொழுகைக்கான நேரம் வரும்வரைக்கும் அல்-குர்ஆன் ஓதுவது வழமை. பின்பு சுபஹு தொழுதுவிட்டு சிறுது நேரத்தில் உடற் பயிற்சிக்காக எங்களை அழைத்தார் தலைவர்.

நாங்களோ நுவரெலியா குளிரில் சுருட்டிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தோம். தலைவரின் சுறுசுறுப்பான நடவடிக்கையினை பார்த்துவிட்டு நாங்கள் அதிர்ந்துபோனோம். மார்க்க விடயத்திலோ, வேறு நடைமுறையிலோ அவரது செயற்பாட்டில் சிறிதளவு கூட எங்களால் நடைமுறை படுத்த முடியாதது வெட்கப்படக்கூடியதாக இருந்தது.

அத்துடன் சமநிலையற்றதும், கரடுமுரடான மலைப்பாங்கானதுமான நுவரெலியா கருந்தடி பாதைகளில் பதினெட்டு வயது இளைஞ்சனை போன்று ஏறி இறங்கித்திரிந்த வேகமானது தலைவருடன் சென்ற ஏனைய இளைஞ்சர்களால் அவ்வாறு சுறுசுறுப்பாகவும், வேகமாகவும் இயங்கமுடியாமல் இருந்தது ஆச்சர்யமானதுதான்.

அத்துடன் சென்ற இடமெல்லாம் முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி தமிழ், சிங்கள மக்களினாலும் தலைவருக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும் அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்து உடனடி தீர்வு அவ்விடத்திலேயே வழங்கப்பட்டது. அவர்களது ஆதங்கமெல்லாம் இவ்வளவு காலத்துக்கு எந்த ஒரு மந்திரியும் எங்கள் பிரதேசத்துக்கு வந்ததுமில்லை, எங்களது குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ததுமில்லை. நாங்கள் அநாதரவாக கைவிடப்பட்டு இருக்கின்றோம் என்பதுதான்.

இப்படிப்பட்ட மார்க்க பக்திமட்டுமல்லாது தலைமைத்துவ அனைத்து தகுதியும், ஏழைகள் மீது அன்பும் கொண்ட ரவுப் ஹக்கீமைத் தவிர வேறு யாரால் எமது முஸ்லிம் சமூகத்துக்கு தலைமை தாங்க முடியும்?

தங்களது பதவிக்காவும், அரசியல் அதிகாரத்துக்காகவும் மக்களை குழப்பி அதில் ஒற்றுமையாக இருக்கின்ற முஸ்லிம் மக்களை கிழக்கு என்றும், வடக்கு என்றும் பிரதேச ரீதியாக பிரித்து தங்களது அரசியல் ஆதாயம் அடைய முற்படுகின்ற சுயநலவாதிகளுக்கு அல்லாஹ் உதவி செய்வானா? அல்லது முஸ்லிம் சமூக ஒற்றுமையை வலியுறுத்துகின்றவர்களுக்கு உண்மையானவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்வானா?

இரவு நேரங்களில் மது அருந்திக்கொண்டு தங்களது அரசியல் எதிர்காலம் பற்றியும், அடுத்த பதவி பற்றியும் சிந்திக்கின்றவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்வானா? அல்லது இரவு நேரங்களில் அல்லாஹ்வை அதிகம் நின்று வணங்குகின்ற முஹ்மீனுக்கு அல்லாஹ் உதவி செய்வானா?

எனவேதான் தலைவர் ரவுப் ஹக்கீம் எப்படிப்பட்டவர் என்பதற்கு நாங்களே சாட்சி. அவரை தவிர இன்றைய நிலையில் எமது நாட்டு முஸ்லிம் மக்களை தலைமை தாங்க வேறு யாருக்கும் எந்த தகுதியும் இல்லை என்பதுதான் உண்மையான கருத்து. மற்றவைகள் அனைத்தும் ஊடக வேசங்களே.

LEAVE A REPLY