போலி முகவர் நிலையம் நடத்திய என்.எம்.ஹனீபா கைது

0
231
(அப்துல்சலாம் யாசீம்-)
வெளிநாடு செல்வதற்கான போலி முகவர் நிலையமொன்றை நடத்திவந்ததாகக் கூறப்படும் ஒருவரை திருகோணமலை- முள்ளிப்பொத்தானைப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை  (22) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் போலி முகவர் நிலையம் இயங்கிவருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின்; திருகோணமலை மாவட்டக் கிளைக்குத் தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து குறித்த பணியகத்தின் திருகோணமலை மாவட்டக் கிளை அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடத்தியபோது  குறித்த முகவர் நிலையத்தைக் கண்டுபிடித்ததுடன்  சந்தேக நபரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் முள்ளிப்பொத்தானை-யுனிட் 10யைச்சேர்ந்த நஸூர் என்றழைக்கப்படுகின்ற என்.எம்.ஹனீபா (57 வயது) எனவும் தெரியவருகின்றது.
இச்சந்தேக நபரிடமிருந்து 3 கடவுச்சீட்டுகளையும் வீஸா தொடர்பான போலி ஆவணங்களையும் போலி வைத்திய அறிக்கை ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இச்சந்தேக நபரை நாளை வெள்ளிக்கிழமை கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை தம்பலகாமம்  பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY