குவைத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பில் இலங்கையர் மரணம்; மற்றொருவருக்கு பலத்த காயம்

0
268

Dead-body-in-morgue-006குவைத்தின் கைதான் நகரில் இடம்­பெற்ற சமையல் எரி­வாவு சிலிண்டர் வெடிப்பு சம்­ப­வத்தில் இலங்கை பிரஜை ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­படு­கி­றது.

இந்தச் சம்­பவம் இலங்கை பிர­ஜைகள் தங்­கி­யி­ருந்த விடு­தி­யொன்றில் கடந்த 18 ஆம் திகதி இடம்­பெற்­றுள்­ளது.

இதில் இலங்கை பிர­ஜைகள் இருவர் பலத்த காயங்­க­ளுக்குள்­ளாகி வைத்­தி­ய சாலையில் சிகிச்சை பெற்று வந்­துள்ள நிலையில் இவர்­களுள் ஒருவர் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

வெலி­மடை குருத்­த­லாவை பிர­தே­சத்தை சேர்ந்த நபர் ஒரு­வரே உயி­ரி­ழந்­ துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் தங்­கி­யி­ருந்த அறை­யி­லுள்ள சமையல் எரி­வாயு சிலிண்டர் திடீரென வெடித்தபோது இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

Source: Metronews

LEAVE A REPLY