பூனைக்கு விளையாட்டு எலிக்கு உயிர் போகின்றது – சிரியாவின் யதார்த்தம்

0
342

(முஹம்மது ராஜி)

syria-refugees-campsஇது என்ன ஹொலிவூட் படமா இல்லை பொலிவூட் படமா? திரை, கதை, வசனம், தயாரிப்பு எல்லாம் கட்சிதமாக ஒருங்கமைக்கப்பட்டுள்ளது.

பெரிய சண்டியர்களுக்கான விருது வழங்கும் போட்டியில் இரு வல்லரசுகளுக்கிடையே நிழல் யுத்தம்.

ஆனால் இதற்கான விலையை கொடுப்பது மட்டும் அப்பாவி சிரிய மக்கள்.

ஆம்! சிரியாவின் நடக்கிற சதுரங்கப்போட்டியில் ஒரு பக்கம் அமெரிக்கா இன்னொரு பக்கம் ரஷ்யா. இடையில் நின்று கொண்டு தடுமாறுகிறது துருக்கி. பார்வையாளர் வரிசையில் விசில் அடிச்சான் குஞ்சுகளாக அரபு நாடுகள்.

கடந்த வாரம் யுத்த நிறுத்தம் அமெரிக்காவினாலும் ரஷ்யாவினாலும் இணங்கப்பட்ட மறுதினமே ஐ.எஸ் படைகள் என்று தப்புக்கணக்கு போட்ட அமெரிக்கா தார் அல் ஸ்வ்ர் பகுதியில் சிரியா படைகள் மீது குண்டு மழை பொழிந்ததில் 80 க்கும் அதிகமான சிரிய படைகளை செத்து மடிந்தன. நூற்றுக்கும் அதிமான படைகள் காயம் அடைந்தன.

செய்தி சர்வதேச அரங்கில் சமிபாடு அடைய முன்னரே இன்னொரு நாடகம் அரங்கேறி முடிந்தது. அந்த நாடகத்தின் தயாரிப்பு யார் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

முற்றுகைக்கு உள்ளாகியுள்ள சிரியா மக்களுக்காக 20 ட்ரக்குகள் மூலம் உணவு பொருட்களை கொண்டு சென்ற ஐ.நா உணவு நிவாரண அணி தாக்கப்பட்டது. இதில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரிய விமானங்கள் அல்லது ரஷ்ய விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா பாய்ந்து விழுந்து கொண்டு குற்றம் சாட்டியது.

அரசியல் நெருக்கடிகளின் போது கிரிக்கட் மேட்சுகளை காட்டி மக்களை டீ.வி களுக்கு முன்னால் கட்டிப்போட்டு திசை திருப்புவது போல அமெரிக்காவே அதை செய்து விட்டு யுத்த நிறுத்தத்தின் போது இடம்பெற்ற தாக்குதலை திசை திருப்ப இது போன்ற ஒரு தாக்குதலை நடத்தி இருக்க முடியும்.

அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே?

ஐ.நா நிவாரண அணியை தாக்கியது தாங்கள் இல்லை, அமெரிக்க விமானங்கள் என்று அடித்து சொல்லுகிறது ரஷ்யா.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் அமெரிக்க ஆளில்லாத விமானங்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்ததாக கூறுகிறது ரஷ்யா.

பூனைகளுக்கு விளையாட்டு எலிகளுக்கு உயிர் போகின்றது என்பது போல வல்லரசுகளின் யுத்த நாடகங்களுக்கு உயிர்கள் மூலம் விலை செலுத்துவது மட்டும் அப்பாவி சிரிய மக்கள் என்பது கடும் கவலைக்குரிய விடயம்.

LEAVE A REPLY