6 வயது சிறுமி கொலை: சிறுவனுக்கு 06ஆம் திகதி வரை விளக்கமறியல்

0
235

(அப்துல்சலாம் யாசீம்-)

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாங்கேணிப் பகுதியில் கடந்த 8ஆம் திகதி 6 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில்இ சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 16 வயது சிறுவனை எதிர்வரும் மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதவான் நீதமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் இன்று வியாழக்கிழமை (22) உத்தரவிட்டார்.

குறித்த 16 வயது சிறுவன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதவானினால் விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது அவ்விளைஞன் குற்றத்தை ஒப்புக் கொள்ளாமையினாலையே மேற்படி விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

LEAVE A REPLY