மட்டக்களப்பில் புகையிரதம் விபத்து

0
490

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் ஏற்பட்ட புகையிரத விபத்து காரணமாக ஒரு புகையிரதப் பெட்டி சேதமடைந்துள்ளதுடன், புகையிரதப் பாதையும் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதம நிலைய அதிபர் எம்.பி.கபூர் தெரிவித்தார்.

இன்று (22) வியாழக்கிழமை காலை கொழும்புக்குப் புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த புகையிரதத்தில் மற்றைய புகையிரதத்தின் எஞ்சின் மோதியதில் புகையிரதப் பெட்டி ஒன்று சேதமடைந்துள்ளதுடன், எஞ்சின் ஒன்றும் புகையிரதப் பாதையிலிருந்து தடம் புரண்டு புகையிரதப் பாதையும் சேதமடைந்துள்ளது.

dsc_1225காலை 5.05 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்து காரணமாக புகையிரதம் தடம்புரண்ட போதிலும் பயணிகள் எவருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக காலை 6.15க்குப் புறப்படும் புகையிரதம் ஒரு பெட்டி குறைக்கப்பட்டு பயணத்தினை மேற்கொண்டுள்ளது. இருந்தாலும் பகல் 10.25க்கு பொலநறுவை நோக்கிச் செல்லும் புகையிரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரம், புகையிரதப் பாதைத்திருத்த வேலைகளுக்காக தற்போது மாகோவில் இருந்து திருத்தச் செயலணியும், பாதையிலிருந்து கீழே விழுந்துள்ள புகையிரதப் பெட்டியைத் தூக்கி பாதையில் நிறுத்துவதற்கான இயங்திரங்களும் ஏனைய இயந்திரங்களும் மட்டக்களப்புக்கு வந்து கொண்டிருக்கின்றன.

புகையிரதத்தின் ஒரு பெட்டி சேதமடைந்தமையினாலும், பாதையிலிருந்து விலகியதனாலும் தற்போதைய நிலையில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு மாலை 5.20 மணிக்கு புறப்படும் புகையிரதத்தின் பயணத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார்.

எப்படியிருந்தாலும் இரவு 8.15க்கு கொழும்புக்குப் புறப்படும் நேரத்துக்கு முன்பாக திருத்த வேலைகளை நிறைவு செய்து கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

-Enkal Thesam-

LEAVE A REPLY