கல்முனையில் கரையோர சுத்தம் செய்யும் வேலைத் திட்டம் முன்னெடுப்பு!

0
134

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சர்வதேச கரையோர சுத்தம் பேணல் தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை கரையோரப் பகுதிகளை சுத்தம் செய்யும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கரையோர பாதுகாப்பு, முகாமைத்துவ திணைக்களத்தின் அனுசரணையுடன் கல்முனை மாநகர சபை, கல்முனை பிரதேச செயலகம், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை பொலிஸ் நிலையம் என்பன இணைந்து இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இந்த சுத்தப்படுத்துதல் பணிகளில் மாநகர ஆணையாளர், பிரதேச செயலாளர்கள் உட்பட மேற்படி அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொலிஸாருடன் சமுர்த்தி பயனாளிகளும் பங்கேற்றிருந்தனர்.

கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மருதமுனை, பெரிய நீலாவணை, பாண்டிருப்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள கரையோர பகுதிகள் இதன்போது சுத்தம் செய்யப்பட்டன.

LEAVE A REPLY