சம்மாந்துறை வலய பாடசாலை அபிவிருத்திற்கு 206.98 மில்லியன் நிதி ஒதுக்கீடு.

0
338

(எம்.எம்.ஜபீர்)

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளின் அபிவிருத்திக்கென கல்வி திணைக்களத்தினுடாக 206.98 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலத்தில் தொழில்நுட்ப ஆலோசனை கட்டிடம் அமைப்பதற்கென 17.69 மில்லியன் ரூபா நிதியும், சம்மாந்துறை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் இருமாடி ஆரம்ப கற்கை பிரிவு கட்டிடம் அமைப்பதற்கென 17.33 மில்லியன் ரூபா நிதியும், வரிப்பத்தான்சேனை லீடர் ஜூனியர் பாடசாலையில் இரு மாடி ஆரம்ப கற்கைகள் வள நிலையக் கட்டிடம் அமைப்பதற்கென 17.33 மில்லியன் ரூபா நிதியும், சம்மாந்துறை அல்-முனீர் வித்தியாலயத்தில் இருமாடி கனிஷ்ட இரண்டாம் தர ஆய்வு கூடமும், நூலகமும்; அமைப்பதற்கென 15.91 மில்லியன் ரூபா நிதியும், சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் இருமாடி கனிஷ்ட இரண்டாம் தர ஆய்வு கூடமும், நூலகமும் அமைப்பதற்கென 15.91மில்லியன் ரூபா நிதியும், மத்தியமுகாம் அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயத்தில் தனிமாடி ஆரம்ப கல்வி வளநிலையம் அமைப்பதற்கென 24.81 மில்லியன் ரூபா நிதியும், வீரமுனை ஆர்.கே.எம். வித்தியாலயத்தில் தனிமாடி ஆரம்ப கல்வி வள நிலையம்; அமைப்பதற்கென 16.5 மில்லியன் ரூபா நிதியும், சம்மாந்துறை அல்-அர்சாத் மகா வித்தியாலயத்தில் தனிமாடி ஆரம்ப கல்வி வள நிலையம்; அமைப்பதற்கென 16.5 மில்லியன் ரூபா நிதியும், வாங்காமம் இலுக்குச்சோலை ஜி.எம்.எம்.எஸ் பாடசாலைக்கு இரு மாடி வகுப்பறைக் கட்டிடம் அமைப்பதற்கென 5.5 மில்லியன் ரூபா நிதியும், வரிப்பத்தான்சேனை அல்-அஸ்ஹர் வித்தியாலத்தில் இருமாடி வகுப்பறைக் கட்டிடம்; அமைப்பதற்கென 5.5 மில்லியன் ரூபா நிதியும், வரிப்பத்தான்சேனை அல்-அமீன்; வித்தியாலத்தில் இருமாடி கணனி ஆய்வு கூடமும் வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்கென 07 மில்லியன் ரூபா நிதியும், சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலயத்தில் இருமாடி வகுப்பறைக் கட்டிடம் அமைப்பதற்கென 5.5 மில்லியன் ரூபா நிதியும், சம்மாந்துறை அல்-அஸ்மான் வித்தியாலயத்தில் இருமாடி வகுப்பறைக் கட்டிடம் அமைப்பதற்கென 5.5 மில்லியன் ரூபா நிதியும், சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தில் இருமாடி வகுப்பறைக் கட்டிடம் அமைப்பதற்கென 5.5 மில்லியன் ரூபா நிதியும், சவளக்கடை வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் இருமாடி வகுப்பறைக் கட்டிடமும் கணனி ஆய்வு கூடமும் அமைப்பதற்கென 07 மில்லியன் ரூபா நிதியும், நாவிதன்வெளி ஹிக்மா வித்தியாலயத்தில் இருமாடி வகுப்பறைக் கட்டிடம் அமைப்பதற்கென 5.5 மில்லியன் ரூபா நிதியும், சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தின் புணர் நிர்மாண வேலைக்கு 02 மில்லியன் ரூபா நிதியும், சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் புணர் நிர்மாண வேலைக்கு 02 மில்லியன் ரூபா நிதியும், சென்நெல் ஸாஹிரா வித்தியாலயத்தின் புணர் நிர்மாண வேலைகளுக்கு 02 மில்லியன் ரூபா நிதியும், சம்மாந்துறை அல்-முனீர் வித்தியாலயத்தின் புணர் நிர்மாண வேலைகளுக்கு 02 மில்லியன் ரூபா நிதியும், வீரமுனை ஆர்.கே.எம். வித்தியாலயத்தின் புணர் நிர்மாண வேலைகளுக்கு 02 மில்லியன் ரூபா நிதியும், சவளக்கடை வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் புணர் நிர்மாண வேலைகளுக்கு 02 மில்லியன் ரூபா நிதியும், மத்தியமுகாம் அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயத்தின் புணர் நிர்மாண வேலைகளுக்கு 02 மில்லியன் ரூபா நிதியும், வரிப்பத்தான்சேனை அல்-அமீன் மகா வித்தியாலயத்தின் புணர் நிர்மாண வேலைகளுக்கு 02 மில்லியன் ரூபா நிதியும், இறக்காமம் அல்-மதீனா வித்தியாலயத்தின் புணர் நிர்மாண வேலைகளுக்கு 02 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அண்மைய பாடசாலை, சிறந்த பாடசாலை, பீ.எஸ்.டீ.ஜீ ஆகிய திட்டங்களின் கீழ் இப்பாடசாலைகள் அபிவிருத்தி மற்றும் புணர்நிர்மான செய்யப்பட்டவுள்ளது. இந்த அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் அனைத்தும் இவ்வருட இறுதிக்கு முன்னர் நிறைவு செய்யப்பட்டு மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY