மனித உரிமைகள் அமைப்புக்களின் கோரிக்கையின் எதிரொலி – மனநலம் பாதிக்கப்பட்டவரின் மரண தண்டனையை ஒரு வாரம் பிற்போட்டது பாக்கிஸ்தான்

0
204

(எம்.ஐ.அப்துல் நஸார்)

கடந்த செவ்வாய்கிழமை துஸக்கிலிடப்பட்டிருக்க வேண்டிய பாக்கிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட கைதியொருவரின் மரண தண்டனையினை மனித உரிமைகள் அமைப்புக்களின் கோரிக்கைகளையடுத்து பாக்கிஸ்தான் உச்சநீதிமன்றம் ஒரு வார காலத்திற்குப் பிற்போட்டுள்ளது.

வீட்டுப் பாவனைப் பொருட்கள் பழுதுபார்க்கும் இம்தாத் அலிக்கு பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான லாஹுரிலிருந்து சுமார் 300 கிலோமீற்றர் தொலைவிலுள்ள வெஹாரி நகரில் உள்ளூர் பள்ளிவாயல் இமாம் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக 2001ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

‘இம்தாத்தின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் வரை பிற்போட்டுள்ளமையினை அறிந்து நாம் மிகவும் ஆறுதல் அடைந்துள்ளோம்’ என பாதிப்புகளுக்கு இலக்காகக்கூடிய கைதிகளுக்கு சட்ட உதவி வழங்கும் அமைப்பான பாக்கிஸ்தான் நீதித் திட்டத்தைச் சேர்ந்த சாராஹ் பிலால் குறிப்பிட்டார்.

‘அவர் மனநலம் குன்றியவர் என்ற வெளிப்படையான உண்மையினை மதிப்புமிகு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அவரது நிலையினை மீண்டும் மீண்டும் வைத்திய சமூகத்தினரும், குடும்பத்தினரும், இது தவிர சிறை அதிகாரிகள் கூட உறுதிப்படுத்தினர்’ என அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இம்தாதின் மனைவியான சபிய்யா பானுவுக்கு இம்தாத் தூக்கிலிடப்படவுள்ளமை தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. ஆனால் நீதி மன்ற கட்டளையினைத் தொடர்ந்து அவரின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனினும் அவரது கணவனின் உயிர் ஊசலாடிக்கொண்டே இருக்கின்றது.

2013ஆம் ஆண்டு தொடக்கம் இம்தாத் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிய தனிமைச் சிறையில் கடந்த திங்கட்கிழமை அவரைச் சந்தித்த சபிய்யா பானு ‘தான் இறக்கப் போவது பற்றி எந்தவித பிரஞ்ஞையும் இல்லாமல் காணப்பட்டார்’ எனத் தெரிவித்தார்

அவர் ஆன்மீகம் பற்றியும் சூனியம் பற்றியும் அதிகம் பேசினார். இமாhமின் கொலைக்கு முன்னதாக அவர்ற்றில் அவர் அதிக ஈடுபாடுடையவராகக் காணப்பட்டார் எனவும் பானு தெரிவித்தார்.

1993ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்தது தொடக்கம் அம்தாத் மனநலம் பாதிக்கப்பட்டவராகசே காணப்பட்டதாக பானு சுட்டிக்காட்டினார்.

என்னுடன் ஒருபோதும் அவர் சண்டையிட்டது கிடையாது எனவும் பானு தெரிவித்தார்.

இம்தாதை சிறையில் சந்தித்த அவரது வளர்ப்பு மகன் முதாஸிர் இம்தாத் பற்றிக் குறிப்பிடும்போது ‘மாயத் தோற்றத்திற்கு இலக்கானவர்’ போன்று காணப்பட்டதாககத் தெரிவித்தார்

ஒரு வருடத்திற்கு முன்னர் இராணுவப் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு தொடக்கம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருந்த மரண தண்டனை மீள அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இம்தாத் உட்பட சுமார் எட்டாயிரம் பேர் மரண தண்டனைக்காகக் காத்திருக்கின்றனர். தடை நீக்கப்பட்டது தொடக்கம் இது வரை சுமார் 400 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாக்கிஸ்தான் சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைவாக இம்தாதின் மனநலப் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க வேண்டியதும், மனநல மருத்துவ வசதிகள் உள்ள இடத்திற்கு இம்தாதை இடமாற்ற வேண்டியதும், அரசின் கடமையாகும், ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக அரசு இந்த விடயத்தில் மெத்தனப் போக்கினையே கடைபிடித்து வருவதாக பிலால் தெரிவித்தார்.

இம்தாத் மனநலப் பாதிப்புக்குள்ளானவர் என மன்னர் எட்வாட் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் லாஹுர் மாயோ வைத்தியசாலை ஆகியவற்றின் உளவியல் மற்றும் நடத்தைசார் அறிவியல் பிரிவைச் சேர்ந்த டாக்டர். உஸ்மான் அமீன் ஹொஸ்டியானா உறுதிப்படுத்தியுள்ளார்.

‘இம்தத் தொடர்பான விபரமான குறிப்புகளை நான் பார்த்தேன், ஆனால் நான் அவருக்கு சிகிச்சையளிக்கவில்லை அதேவேளை சிறைச்சாலை வைத்திய அதிகாரியொருவர் இம்தாத் மனநிலை பாதிக்கப்பட்டவரல்ல’ எனக் கூறியதாக ஹொஸ்டியானா தெரிவித்தார்.

இந்தச் செய்தி எழுதப்படும் வரை பஞ்ஜாபின் முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து இது தொடர்பில் எவ்வித கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.

‘சமஷ்டி மற்றும் மாகாண அரசாங்கங்கள் இந்தத் தவறான மரண தண்டனையினை நிறுத்தி, இம்தாதிற்கு மிக அவசியமாகத் தேவைப்படுகின்ற மருத்துவ வசதிகளை அளிப்பதற்கான போதிய அவகாசம் காணப்படுகின்றது’ என பிலால் தெரிவித்தார்.

எமது மார்க்கச் சட்டத்திலோ அல்லது எமது சட்டத்திலோ மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு அனுமதி கிடையாது.

கடந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பாக்கிஸ்தான் நபரொருவர். இளமைப் பருவத்தில் கைது செய்யப்பட்டு கொலைக் குற்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறு சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட விடயம் சர்வதேச ரீதியில் கடுமையான விமர்சனங்களுக்குட்பட்டது.

50 வயதான இம்தாதின் வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 27ஆந்திகதி விசாரிக்கப்படவுள்ளது. அதன் பின்னரே இம்தாதின் நிலைமை தெரியவரும்

LEAVE A REPLY