கல்வி திருத்தம் கொண்டு வர கல்வி அமைச்சு முயற்சி செய்வது வரவேற்புக்குரியது- மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

0
126

(ஜுனைட்.எம்.பஹ்த்)

ஜி சி ஈ சாதாரண தரத்தில் சித்தியடைந்த அனைவரும் உயர் தரத்தில் கற்க முடியும் என்ற வகையில் கல்வி திருத்தம் கொண்டு வர கல்வி அமைச்சு முயற்சி செய்வது வரவேற்புக்குரியது.

முன்னைய காலங்களில் சாதாரண தரத்தில் தோல்வியடைந்தவர்கள் தனிப்பட்ட ரீதியிலும் உயர்தர பரீட்சையில் கலந்து கொள்ள முடியும் என்றிருந்தது. பின்னர் இவை சில கிறுக்கு பிடித்த புத்திஜீவிகளால் நீக்கப்பட்டது.

இந்த நிலையில் அனைவரும் உயர்தரம் கற்கும் வகையில் மீண்டும் வழி வகுப்பது பாராட்டத்தக்கது. இது விடயமும் கடந்த மஹிந்த அரசில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. ஆனாலும் தீர்மானங்கள் கொண்டு வரப்படவில்லை.

அதே போல் க பொ த . சா. தரம் என்பது 11 வருடங்கள் என்றிருப்பதும் மாற்றப்பட்டு ஆண்டு 10ல் இந்தப்பரீட்சைக்கு தோற்றத்தக்க வகையில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் அதே போல் ஒரு மாணவன் உயர் தரத்தில் சித்தியடைந்ததும் பல்கலைக்கழகம் புகுவதற்கு சுமார் ஒன்னரை வருடங்கள் காத்திருப்பது என்பது மாணவர்களின் வாழ்க்கைக்கு செய்யும் மிகப்பெரிய அநியாயமாகும்.

பரீட்சைக்கு தோற்றி மூன்று மாதங்களில் பரீட்சை முடிவுகள் வெளி வரத்தக்க வகையிலும் அதனூடாக பல்கலைக்கழக அனுமதியும் வழங்கப்படும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். ஒரு மாணவன் தனது 18 வயதில் பல்கலைக்கழகம் புகுவதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

அதி நவீன சாதனங்கள் நிறைந்துள்ள இன்றைய உலகில் இவ்வாறான ஏற்பாடுகள் செய்வது என்பது மிக இலகுவான ஒன்று என்பதை அரசு புரிந்து செயற்பட வேண்டும்.

LEAVE A REPLY