ஏறாவூர் இரட்டைக் கொலையும் இருட்டடிக்கப்படும் உண்மை நிலையும்….!

0
2138

(வை.எம். பைரூஸ்)

கடந்த வாரம் அரபாவுடைய நோன்பு தினத்தில் அதாவது 11.09.2016 ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர், முகாந்திரம் வீதீயில் உள்ள வீட்டில் நடுநிசி நேரத்தில் ஒரு தாயும், மகளும் படுகொலை செய்யப்பட்ட விடயம் நாம் அறிந்ததே.

இந்த கொலைக்கு பிற்பாடு தேடுதல் வேட்டையை மேற்கொண்ட பொலிசார் குறிப்பிட்ட பிரதேச எல்லைக்குற்பட்ட கண்கானிப்பு கெமராவின் (CCTV) மூலம் வசம்பு என்ற நபரை கையும் மெய்யுமாக கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரனைகளின் பின்னர் கொலைக்கு முக்கிய சூத்திரதாரியாக கொள்ளப்பட்ட பெண்ணின் கணவனின் சகோதரர் இனம் காணப்பட்டதோடு கொல்வதற்கு உதவியதாக கூறப்படும் பெயர் குறிப்பிடப்படாத மேலும் இரண்டு பேர் இனங்காணப்பட்டு விசாரனைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து ஒரு செய்தி கசிந்த வண்ணம் இருந்தது.

இது இவ்வாரிருக்க திடீர் திருப்பு முனையாக கொலையின் முக்கிய சூத்திரதாரியாக குவைத்திலிருந்த கணவனே பணம் கொடுத்து கொல்லச் சொன்னதாக குற்றவாளிகள் ஒப்புக் கொண்டதாக சமூக வளைத் தளங்களிலும் ஓர் செய்தி உலா வந்து கொண்டிருந்த நிலையில் கணவனும் தலை மறைவாகியிருந்தார்.

நேற்று முன்தினம் கொலையின் பிரதான சந்தேக நபரான வசம்பு என்பவர் தனது வாக்கு மூலத்தை முற்றிலும் மாற்றமாக தனது முதலாலி அதாவது வசம்பு வேளை பார்க்கும் வெளிநாட்டு வாய்ப்பு நிலைய (manpower agency) உரிமையாளரான பிலால் என்பவரும் அவருக்கு உடந்தையாக சப்ரின் என்பவருமே இருந்ததாக ஒப்புக் கொண்டுள்ளது மக்கள் மத்தியில் மேலும் பாரிய பீதியையும் அச்சத்தையும் கிளப்பியுள்ளது.

கொலையின் பின்னணி சூத்திரதாரியாக கணவனும், கணவனின் சகோதரருமே இருக்கின்றார்கள் என்று நம்பி வந்த பொது மக்கள் மத்தியில் பிலாலின் வாக்கு மூலமும், உடந்தையாக இருந்த சப்ரின் என்பவரின் வாக்கு மூலமும் பாரிய ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

எது எவ்வாறு இருந்தாலும் இன்னும் சரியான விசாரனைகள் முடியவில்லை என்ற நிலைப்பாடும் இருக்கத்தான் செய்கின்றது. பிலால் என்பவருக்கு அரசியல் வாதிகள், அரசாங்க உயர் அதிகாரிகளிடத்தில் தொடர்பு இருப்பதால் ஏற்கனவே உயர் அதிகாரிகளுக்கு தெறிந்தும் உண்மை நிலை இருட்டடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் கிளம்பியுள்ளது.

உண்மையான கொலையாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டு சரியான தண்டனைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நல்லாட்சி அரசாங்கத்துக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் முன் வைத்து ஓர் ஆர்ப்பாட்ட பேரணி ஏறாவூர் பிரதேசத்தில் இன்று நடைபெறுகின்றது. இதில் கிழக்கு முதலமைச்சர் நசீர் ஹாபீஸ், மாகாண சபை உறுப்பினர் சுபைர், மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆகியோர் கலந்து கொண்டுள்ளதாக எம்மால் அறியக் கிடைத்தது.

கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி உரிய தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதே மனித நேயத்தை மதிக்கின்ற ஒவ்வொரு தனிமனிதனின் கருத்தாக இருக்கக்கூடும்.

தற்போதய சூழ் நிலையில் பிலால் பணம் படைத்தவர், அரசியல் வாதிகளின் உறவுக்காரர் போன்ற சில காரணத்தினால் சட்டத்திலிருந்து இலகுவாக தப்பித்துக் கொள்ள முயற்சிக்க முடியும்.

இருந்தும் நல்லாட்சி அரசாங்கம் இதில் கூடிய கவனம் செலுத்தி விசாரனையை தீவிரப்படுத்தி கால தாமதமான்றி உரிய தண்டனையை குற்றவாளிகளுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக ஏறாவூர் பிரதேசத்து அரசியல் வாதிகள், அரசாங்க உயர் அதிகாரிகள், ஊர் பிரமுகர்கள் அனைவரும் இந்த விடயத்தில் கரிசனை காட்டுவதோடு குற்றவாளிக்கு எந்த காரணத்தை கொண்டும் தப்பிக்க விடாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு விட்டால் சட்டத்தை மக்கள் எடுக்கக் கூடிய சூழ் நிலையே ஏற்படும்.

LEAVE A REPLY