முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடக் கூட்டத்தில் செயலாளர், தவிசாளர் பங்கேற்கவில்லை

0
249
  • தனிப்பட்ட வேலைப்பளு – ஹஸன் அலி
  • உறவினர் சுகயீனம் – பஷீர் ஷேகு தாவூத்

Hassan Aliஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் அர­சி யல் உயர்­பீடக் கூட்டம் நேற்று முன்­தி­ன­மி­ரவு நடை­பெற்ற போது கட்­சியின் செய­லா­ள­ரான எம்.ரி.ஹஸன் அலி மற்றும் தவி­சாளர் பஷீர் ஷேகு­தாவூத் ஆகியோர் பங்­கேற்­க­வில்லை. அத்­துடன் குறித்த கூட் டம் ஆரம்­பித்து ஒரு மணித்­தி­யா­லத்­துடன் முடி­வ­டைந்­துள்­ள­தாகத் தெரிய வரு­கி­றது.

கொழும்­பி­லுள்ள அதன் தலை­மை­ய­க­மான தாருஸ்­ஸ­லாமில் கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தலை­மையில் இந்தக் கூட்டம் இடம்­பெற்­றது.

இந்த நிலையில் கட்­சியின் செய­லா­ளரும் தவி­சா­ளரும் வருகை தருவர் என எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில் அவர்கள் இரு­வரும் கலந்து கொள்­ள­வில்லை.

basheer12இது தொடர்பில் கட்­சியின் செய­லா­ள­ரான ஹஸன் அலி­யுடன் மெட்ரோ நியூஸ் தொடர்பு கொண்டு கேட்ட போது, குறித்த கூட்டம் ஏற்­பா­டா­கி­யி­ருந்த தினத்தில் தனிப்­பட்ட வேலைப் பளுக்கள் இருந்­தமை கார­ண­மாக தான் கலந்து கொள்­ள­வில்லை என்று தெரி­வித்­தனர்.

கட்­சியின் தவி­சா­ள­ரான பஷீர் ஷேகு தாவூத்­துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, தனது உற­வினர் ஒரு­வரின் சுக­யீனம் கார­ண­மாக தான் சில ஏற்­பா­டு­களைச் செய்ய வேண்­டி­யி­ருந்­த­மையால் தன்னால் கலந்து கொள்ள முடி­யாது போன­தாகத் தெரி­வித்தார்.

இதே­வேளை, கட்சி தவி­சாளர் பஷீர் ஷேகு தாவூதின் அண்­மைக்­கால கட்­சிக்கு எதி­ரான செயற்­பா­டுகள் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் பலர் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் தெரிய வருகிறது.

Source: Metronews

LEAVE A REPLY