2019 உலகக்கிண்ணத்தை வெல்வதே எமது இலக்கு: பிரதமர் ரணில்

0
195

2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கட் தொடரை வெற்றிகொள்வதே தமது இலக்கு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கட் அணியினர் மற்றும் பாடசாலை மட்டத்திலான கிரிக்கட் அணிகளுக்கு அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட விருந்து வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘இலங்கையில் கிரிக்கட்டை மேம்படுத்துவதற்கு தேசிய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

உலகை வெற்றிகொள்ளும் நோக்குடனேயே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன கிரிக்கட் விளையாட்டை ஆரம்பித்து வைத்தார். இதன் பிரகாரம் தற்போது உலக நாடுகளுடன் போட்டியிடுகின்றோம்.

4988120302e3c1cc1f7099e40b9e7996_lஇதனை நினைக்கும் போது இலங்கையர் என்ற வகையில் பெருமை அடைகின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்திற்கான இலங்கை கிரிக்கட் அணி, பாடசாலை மட்டங்களிலிருந்து உருவாகின்றது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இனபேதங்கள் நாட்டில் காணப்பட்டாலும் நாம் அனைவரும் இலங்கையர் என்ற வகையில் எமது அணிக்கு பேராதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிகழ்வில், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இலங்கை கிரிக்கட் தலைவர் திலங்க சுமதிபால, அமைச்சர் சாகல ரத்நாயக்க,பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை கிரிக்கட் அணித்தலைவர் மெத்தியூஸ் உட்பட கிரிக்கட் வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Source: Thinakaran

LEAVE A REPLY