எச். ஐ. வி: 394 பேர் உயிரிழப்பு; 2436 பேர் அடையாளம் காணப்பட்டனர்

0
221

எச். ஐ. வி. நோயாளர்கள் 2436 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு கடந்த ஐந்து வருட காலத்தில் எச். ஐ. வி. காரணமாக 394 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சுதேச மருத்துவ அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

வாய்மூல விடைக்காக புத்திக பத்திரண எம். பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், 2436 எச். ஐ. வி. தொற்றிய நோயாளிகளில் 631 எயிட்ஸ் நோயாளிகள் என அடையாளங் காணப்பட்டுள்ளனர். எயிட்ஸ் காரணமாக 2011 இல் 32 பேரும் 2012 இல் 30 பேரும் 2013 இல் 27 பேரும் 2014 மில். 26 பேரும் 2015ல் 31 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சிறைக்கைதிகளை எச். ஐ. வி. பரிசோதனைக்குட்படுத்தி வருகிறோம். கர்ப்பிணியான எச். ஐ. வி. நோயாளிகளுக்கு விசேட பரிசோதனை செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்கள் அரச துறைக்கு வரும் ஊழியர்கள் ஆகியோருக்கும் எச். ஐ. வி. பரிசோனை நடத்த இருக்கிறோம் என்றார்.

Source: Thinakaran

LEAVE A REPLY