எண்ணெய்க் கசிவு முகாமைத்துவத்தில் இலங்கை, மாலைதீவுடனான ஐக்கிய அமெரிக்க அமைதிக் கட்டளைப் பங்குதாரர்

0
204

சுற்றாடல் மற்றும் சுற்றுலாத்துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எண்ணெய்க் கசிவுச் சூழ்நிலை விவகாரம் தொடர்பான பதில் மற்றும் அதற்கான தயார்படுத்தல் பற்றி இலங்கை மற்றும் மாலைதீவிலிருந்து எதிர்ப்பகுதிகளிலிருந்து அனர்த்தரீதியான பதிலுக்காக பயிற்சி ஒன்றினை அமெரிக்க அமைதிக் கட்டளை நிபுணர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் இரு நாடுகளையும் சேர்ந்த நிர்வாக அலுவலர்களும், இராணுவத்தினரும் பங்குபற்றுநர்களாகக் கலந்து கொண்டு கடலில் நேரடியான பரிசோதனைகள் உள்ளடங்கலாகக் கடலில் ஏற்படும் எண்ணெய்க் கசிவின் தாக்கத்தைப் பற்றி தமது துறைசார் அனுபவத்தினைப் பகிர்ந்து கொண்டார்கள்.

ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அத்துள் கேசாப் அவர்கள் கூறுகையில், ‘இந்து சமுத்திரப் பிராந்தியத்தை நன்றான முறையில் பாதுகாத்தல் என்பது இதன் பிரதான காரணமாக அமைகின்றது ஏன் என்றால் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இருநாடுகளுக்கும் பிராந்திய ஒருங்கிணைப்பினை அபிவிருத்தி செய்வது என்பது மிகவும் இன்றியமையாதது என்பதனால் ஆகும்’ என்று கூறினார்.

‘எமது கடல்களினால் உணவு மற்றும் தொழில் வாய்ப்பினை தொடர்ந்து வழங்க முடியும் என்பதை நிச்சயப்படுத்திக் கூறுவதில் ஐக்கிய அமெரிக்காவானது இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளுடன் ஒன்றாக இணைந்து நிற்கும்’ என்றும் கூறினார்.

ஐக்கிய அமெரிக்க அமைதிக் கட்டளை, இலங்கைக் கடற்படை, இலங்கைக் கரையோரப் பாதுகாப்பு, இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்தோர் ஒரு வாரகாலமாக நடந்த இப் பயிற்சிப்பட்டறையில் இணைந்து பங்குபற்றினார்கள்.

இந்நிகழ்வானது வாஷpங்டனில் உள்ள எமது சமுத்திர மாநாட்டு ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. சுற்றாடல் செயற்பாட்டாளர்கள், விஞ்ஞானிகள், வர்த்தகர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் எமது சமுத்திரத்தையும் அதனுடைய வளங்களையும் பாதுகாப்பதற்குரிய செயற்பாடுகளுக்கான பொறுப்புடைமையையும் தீர்வினையும் கண்டுபிடிப்பதற்கு ஒன்று கூடியுள்ளனர்.

LEAVE A REPLY