இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் படுகாயம்

0
162

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-நகர் பகுதியிலுள்ள பிரதான வீதி முற்சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியதில் இன்று (21) பிற்பகல் 5 மணியளவில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் திருகோணமலை-முருகன் கோயிலடி -பாலையூற்று பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த நிமால் ரஞ்சன் கீதா(39 வயது) அவரது மகளான நிவிசாலி (08வயது) மற்றும் சோதரியான பாஸ்கரன் மாலனி (40வயது) எனவும் மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த திருகோணமலை-உப்புவெளி பகுதியைச்சேர்ந்த யோகேஸ்வரன் பிரியதர்ஷனி (21வயது) ஆகியோரே காயமடைந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருடைய மோட்டார் சைக்கிளும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY