சட்டவிதிமுறைகளை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 10 வர்த்தகர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை

0
136

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் இன்று (21) திருகோணமலை நகரிலுள்ள ஹோட்டல் ,பலசரக்கு கடைகள் போன்ற வர்த்தக நிலையங்களை சோதனைக்குட்படுத்திய போது அரச சட்டவிதிமுறைகளை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 10 வர்த்தகர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவர்கள் பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலைகளுக்கு மேலதிகமாக பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை வர்த்தக நிலையங்களில் வைத்திருந்தமை, பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாமை போன்ற குற்றச்சாட்டின் பேரில் இவ் வர்த்தகர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY