இலங்கைக்கு 2017 இல் மேலதிக ஹஜ் கோட்டா: சவூதி ஹஜ் அமைச்சு உறுதியளிப்பு

0
332

2017 ஆம் ஆண்டு ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக இலங்­கை­ய­ருக்கு மேல­தி­க­மாக ஹஜ் கோட்­டாவை வழங்­கு­வ­தற்கு சவூதி அரே­பி­யாவின் ஹஜ் அமைச்சர் டாக்டர். மொஹமட் சாலிஹ் பின் தாஹிர் பின்தான் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீ­மிடம் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

கடந்த வருடம் ஹஜ் கடமை நடை­பெற்ற காலத்தில் இடம்­பெற்ற விபத்­தி­னை­ய­டுத்து இவ்­வ­ருடம் சவூதி ஹஜ் அமைச்சு ஹாஜி­களின் பாது­காப்பு மற்றும் நலன்­களில் அதிக அக்­கறை கொண்­டி­ருந்­த­தி­னா­லேயே மேல­திகக் கோட்டா வழங்­கப்­ப­ட­வில்லை என்­ப­த­னையும் சவூதி ஹஜ் அமைச்சர், அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­மிடம் தெரி­வித்தார்.

ஹஜ் யாத்­திரை மேற்­கொண்­டி­ருந்த முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால்­துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் சவூதி அரே­பி­யாவில் சவூதி மன்னர் ஏற்­பாடு செய்­தி­ருந்த மதிய போசன விருந்­து­ப­சா­ரத்தில் கலந்து கொண்டார். விருந்­து­ப­சா­ரத்தின் போது அமைச்சர் ஹலீமும் சவூதி அரே­பி­யாவின் ஹஜ் அமைச்­சரும் இலங்­கையின் ஹஜ் விவ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­னார்கள்.

இந்தக் கலந்­து­ரை­யா­டலின் போதே சவூதி ஹஜ்  அமைச்சர் 2017 ஆம் ஆண்டு ஹஜ் கட­மைக்­காக இலங்­கைக்கு மேல­திக கோட்டா வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் ஹலீம் ‘விடி­வெள்ளி’ க்கு கருத்து தெரி­விக்­கையில்;
இந்த வருடம் மேல­திக ஹஜ் கோட்டா கிடைக்­காமற் போனமை தொடர்பில் பலர் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கின்­றனர். ஆனால் சவூதி அர­சாங்கம் ஹஜ்­ஜா­ஜி­களின் பாது­காப்­பினை கரு­தியே மேல­திக ஹஜ் கோட்டா வழங்­க­வில்லை.

அடுத்த வருட ஹஜ் கட­மைக்­காக எமக்கு வழ­மை­யாக வழங்­கப்­படும் கோட்­டாவை விடவும் மேல­திக கோட்­டாவைப் பெற்றுக் கொள்ள நாம் இப்­போ­தி­லி­ருந்தே முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கிறோம். சவூதி ஹஜ் அமைச்­ச­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளேன். அவர் மேல­திகக் கோட்­டா­வுக்கு உறு­தி­ய­ளித்­துள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெகு­வி­ரைவில் அரபு நாடு­க­ளுக்­கான விஜ­ய­மொன்­றினை மேற்­கொள்­ள­வுள்ளார். அவர் ஐக்­கிய அரபு இராச்­சியம், கட்டார், சவூதி அரே­பியா ஆகிய நாடு­க­ளுக்கு பய­ணிக்­க­வுள்ளார். சவூதி அரே­பியா விஜ­யத்­தின்­போது சவூதி மன்­ன­ரி­டமும் ஹஜ் மேல­திக கோட்டா தொடர்­பாக கலந்­து­ரை­யா­ட­வுள்ளார்.

ஹஜ் கடமை நிறை­வெய்­திய பின்பு கஃபா கழுவி சுத்­தப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. கஃபாவை கழுவும் நிகழ்­விலும் நான் கலந்து கொள்­ள­வுள்ளேன். அச் சந்­தர்ப்­பத்­திலும் இலங்­கைக்கு மேல­திக கோட்டா பெற்றுக் கொள்­வது தொடர்­பாக சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளிடம் கோரிக்கை விடுக்­க­வுள்ளேன் என்றார்.

இவ்­வ­ருடம் இலங்­கைக்கு 2240 ஹஜ் கோட்­டாவே வழங்­கப்­பட்­டன. மேல­திக ஹஜ் கோட்­டாவை பெற்றுக் கொள்­வ­தற்­காக முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இரு­வரும் பல முயற்­சி­களை முன்­னெ­டுத்­தனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் சவூதி மன்­ன­ருக்கு இது தொடர்­பாக கடி­த­மொன்றின் மூலம் கோரிக்­கையை முன்­வைத்­தி­ருந்தார்.

இறுதி நேரத்தில் மேல­திக கோட்டா கிடைக்­கு­மென்ற ஓர் எதிர்­பார்ப்பை அரச ஹஜ் கமிட்டி மக்­க­ளுக்கு வழங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இதன் பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஹஜ் கடமைக்காக தயாராக இருந்தார்கள். ஹஜ் முகவர்களிடம் கடவுச் சீட்டுகளை கையளித்து முற்பணமும் வழங்கியிருந்தனர்.

என்றாலும் இலங்கைக்கு மேலதிக ஹஜ் கோட்டா வழங்கப்படாததால் ஏமாற்றத்துக்குள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

-Vidivelli-

LEAVE A REPLY