ஹிருணிகா கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை

0
335

தெமட்டகொட பகுதியில் நபர் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஹிருணிகா பிரேமச்சந்திரவை 50 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப்பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என்.ரணவக்க உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் 21 ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமானதென கூறப்படும் டிபென்டர் வாகனத்தில் நபரொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

–Virakesari-

LEAVE A REPLY