கடத்தல் சமிக்ஞையை இரு தடவைகள் தவறுதலாக அழுத்திய விமானி: சவூதி விமானத்தில் பிலிப்பைன்ஸ் பொலிஸார் தீவிர சோதனை

0
343

சவூதி அரே­பிய விமா­ன­மொன்றின் விமானி, தவ­று­த­லாக “கடத்தல் சமிக்ஞை” பொத்­தானை இரு தட­வைகள் அழுத்­தி­யதால், அவ்­ வி­மானம் பிலிப்பைன்ஸ் விமான நிலை­யத்தின் ஒதுக்குப் புற­மான பகு­திக்கு கொண்டு செல்­லப்­பட்டு, பொலி­ஸாரால் சோத­னை­யி­டப்­பட்ட சம்­பவம் நேற்று இடம்­பெற்­றது.

சவூதி அரே­பியா எயார்­லைன்ஸின் பிளைட் எவ்.வி.872 விமானம் சவூதி அரே­பி­யாவின் ஜெத்தா நக­ரி­லி­ருந்து பிலிப்­பைன்ஸின் மணிலா நக­ருக்குச் சென்­றது. போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த அவ் ­வி­மா­னத்தில் சுமார் 300 பய­ணிகள் இருந்­தனர்.

இதன்­போது மணிலா நக­ரி­லி­ருந்­துள்ள நினோய் அக்­குய்னோ சர்­வ­தேச விமான நிலை­யத்தில் விமானம் தரை­யி­றங்­கு­வதற்கு சில நிமி­டங்­க­ளுக்கு முன்னர், “Squawk 7500” எனும் குறி­யீட்டு சமிக்­ஞையை அனுப்­பு­வ­தற்­கான பொத்­தானை இரு தட­வைகள் அழுத்­தினார்.

இது விமா­னங்கள் கடத்­தப்­ப­டும்­போது இது குறித்து விமானப் போக்­கு­வ­ரத்துக் கட்­டுப்­பாட்­டா­ளர்­க­ளுக்கு அறி­விப்­ப­தற்­கான சமிக்­ஞை­யாகும்.

இச்­ ச­மிக்ஞை பொத்­தானை தான் இரு தட­வை­களும் தவ­று­த­லாக அழுத்­தி­விட்­ட­தாக விமானப் போக்­குவ­ரத்து கட்­டுப்­பாட்­டா­ளர்­க­ளுக்கு தரை­யி­றங்­கு­வ­தற்கு முன்­னரே விமானி அறி­வித்தார்.

194022016-09-20t101457z_362833200_s1beucjfntab_rtrmadp_3_saudiaairlines-philippinesஆனால், பிலிப்பைன்ஸ் விமானக் கட்­டுப்­பாட்­டா­ளர்கள் இவ்­ வி­ட­யத்தை சாதா­ர­ண­மாக எடுத்­துக்­கொள்­ள­வில்லை. அவர்கள் பிலிப்பைன்ஸ் பாது­காப்பு அதி­கா­ரி­களை உஷார்­ப­டுத்­தினர். அதை­ய­டுத்து அவ்­ வி­மானம் மணிலா விமான நிலை­யத்தில் தனி­மை­யான ஓர் இடத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்டு சோத­னை­யி­டப்­பட்­டது.

“அந்த பொத்தான் தவ­று­த­லாக அழுத்­தப்­பட்­டது. ஆனால், இரு தட­வைகள் அழுத்­தப்­பட்­டமை பிரச்­சி­னை­யாகும். இது தவ­று­த­லாக அழுத்­தப்­பட்­ட­தாக விமானம் தரை­யி­றங்­கு­வ­தற்கு முன்னரே ஊழியர்கள் அறிவித்தமை அதிர்ஷ்டவசமானது.

எனினும், பாதுகாப்பு விடயங்களுடன் நாம் விளையாட முடியாது” என மேற்படி விமான நிலையத்தின் முகாமையாளர் எட்மன்ட் மொன்ரியல் கூறினார்.

-Metro News-

LEAVE A REPLY