கிழக்கு முதலமைச்சரின் வாகனம் விபத்து: பொலிஸ் கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் அனுமதி

0
1327

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-புத்தளம் பிரதான வீதியில் மயிலகுடாவ பகுதியில் வீதியின் குறுக்கே நின்ற யானையுடன் மோதியதில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவினர் சென்ற கெப் வாகனம் இன்று (21) விபத்துக்குள்ளானதில் பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காயமடைந்தவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கயான் பிரியதர்ஷன (44வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் இரு பக்கங்களும் திருப்ப முடியாத நிலைக்கு சேதமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

விபத்து தொடர்பாக மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY