தமிழில் தகவல், முறைப்பாடுகளை பொலிஸாருக்கு வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

0
164

வடமாகாணத்தை மையப்படுத்தி பொலிஸ் தலைமையகம் ஆரம்பித்தது

தமிழ் மொழி மூலம் பொலி­ஸா­ருக்கு தக­வல்­களை வழங்­கவும் முறைப்­பா­டு­களை தெரி­விக்­கவும் பொது­மக்­க­ளையும் பொலி­ஸா­ரையும் தொடர்­பு­ப­டுத்­து­வ­தற்­காக இரு புதிய தொலை­பேசி இலக்­கங்­களை பொலிஸ் தலை­மை­யகம் நேற்று அறி­முகம் செய்­துள்­ளது.

வவு­னியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து நேர­டி­யாக தொடர்­பு­படும் வகையில் இந்த இரு புதிய தொலை­பேசி இலக்­கங்­களும் வெளி­யி­டப்­ப­டு­வ­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர கேச­ரிக்கு தெரி­வித்தார்.

0766224949, 0766226363 ஆகிய தொலை­பேசி இலக்­கங்­களே தமிழ் மொழி மூலம் முறைப்­பா­டு­களை பதிவு செய்­வ­தற்­காக அறி­முக்­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் யாழ்., வவு­னியா, மன்னார், கிளி­னொச்சி, முல்லை தீவி மற்றும் காங்­கே­சந்­துறை ஆகிய பிர­தே­சங்­களை சேர்ந்­த­வர்கள் குறித்த இலக்­கங்­க­ளுக்கு அழைத்து தமது முறைப்­பா­டுகள் மற்றும் தக­வல்­களை தமிழில் பொலி­ஸா­ருக்கு வழங்க முடியும் எனவும் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­காட்­டினார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் ஆலோ­ச­னையின் பேரில்­பொலிஸ் திணைக்­க­ளத்தின் 150 ஆவது வருடப் பூர்த்­தியை அடுத்து ‘சமா­தானம்,புரிந்­து­ணர்வு மற்ரும் நல்­லி­ணக்­கத்­துக்­கான தொடர்­பாடல்‘ எனும் திட்­டத்தின் பிர­கா­ரமே நேற்று முதல் இவ்விரு புதிய தொலைபேசி இலக்கங்களும் தமிழ் மொழி தொடர்பில் அறிமுகம் செய்து வைக்கப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: Metronews

LEAVE A REPLY