(ஹஸ்பர் ஏ ஹலீம்)
“மக்கள் அரசியலமைப்பிற்கான செயற்பாடு” சமத்துவம் | கௌரவம் | பொருளாதார நீதி ஆகியவற்றை வலியுறுத்தி அரசியல் பொருளாதார சமத்துவத்துடன் கூடிய நியாயமான சமாதானத்துக்காக ஜனநாயக மயமாக்கலுக்கும், இறையாண்மையையும் அதிகாரங்களையும் அனைத்து இலங்கையர்களுக்குமிடையில் பகிர்ந்துகொள்வதற்கும் புதிய அரசியலமைப்பானது ஒரு வரலாற்று சந்தர்ப்பம் ஆகும்.
அநீதியான பங்கீடுகள், வெவ்வேறான பிராந்தியங்களுக்கும் மக்களுக்கிமிடையில் அசமத்துவம், நலிவடைந்த பொது-சுகாதாரம், கல்வி, சமூக பாதுகாப்பு, சுற்றாடல் பாதிப்பு என்பவற்றுக்கு பொதுமக்களாகிய நாம் முகம்கொடுக்கின்றோம் என்றும், இது நல்வாழ்வு, ஜனநாயகம், சமாதானம் என்பவற்றை பாதிப்பதுடன் வறுமை, பாரபட்சம், புறக்கணிப்பு என்பவற்றை அதிகப்படுத்தும் என்றும் இதில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஊர்வலமானது விகாரமகாதேவி புங்காவில் இருந்து மதியம் ஆரம்பமானது.
இதில் நாட்டின் நாளா பகுதிகளிலிருந்தும் பல நூற்றுக்கணக்கானோர் பங்குபற்றினர். குறிப்பாக வறுமை மற்றும் பிரச்சனைகளை அதிகம் எதிர்கொள்கின்ற புத்தளம், மொனராகலை, மலையக மக்களின் வருகை அதிகமாக காணப்பட்டது. இதனை சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.