காட்டு யானை தாக்கி வயோதிபப்பெண் பலி

0
257

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பள்ளிக்குடியிருப்பு -தங்கபுரம் பகுதியில் இன்று (21) காலை 05 மணியளவில் காட்டு யானை தாக்கி வயோதிபப்பெண் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண் அதே இடத்தைச்சேர்ந்த முத்துலிங்கம் ஜானகி (64 வயது) எனவும் தெரியவருகின்றது.

காலை வீட்டுக்கு அருகில் விழாம்பழம் விழுந்து கிடப்பதை எடுக்கச்சென்ற போதே காட்டு யானை தாக்கியதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சடலம் சம்பவ இடத்தில் உள்ளதுடன் விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY