மக்கள் மனதை வென்ற இலவச ஆயுர்வேத வைத்திய முகாம்

0
297

(ஆதிப் அஹமட்)

நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம.என்.முபீனின் ஏற்பாட்டில் நேற்றும்(19) இன்றும்(20) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற ஆயர்வேத வைத்திய முகாம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

இவ்வைத்திய முகாமில் இரண்டு நாட்களும் சுமார் 1125 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். இலங்கை கொரிய வைத்திய நிபுணர்கள் தலைமையிலான 14 வைத்திய குழுக்களுடன் உள்ளுர் வைத்தியர்களும் இணைந்து பாரிய வைத்திய சேவைகளை வழங்கினர்.

இதன்போது நரம்புகளைத் தேடி வைத்தியம் வழங்கப்படும் அக்குபஞ்சர் சிகிச்சையினை 350 பேர் பெற்றனர். நாற்பட்ட உபாதைகள் பாசிச வாதம் நோய்களுக்கு 155 பேர் சிகிச்சை பெற்றனர். நீரிழிவு நோய், உயர் குருதியமுக்கம், கொலஸ்திரோல், ஆஸ்துமா மற்றும் தோல் வியாதிகளுக்கு 470 பேர் சிகிச்சை பெற்றதுடன் விசேடமாக நடாத்தப்பட்ட முழு உடற்பரிசோதனையில் 200 பேர் சிகிச்கை பெற்றனர்.

மேற்படி சிகிச்சைகளை தனியார் துறையில் பெறுவதாகவிருந்தால் பல ஆயிரம் ரூபாய் செலவுகளை ஒவ்வொருவரும் செலவிட்டிருக்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சைகளை பெற்றதன் பின்னர் பிரார்த்தித்த வன்னம் இறைவன் இந் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு நன்மைகளை வழங்கவேண்டுமென பொது மக்கள் சென்றதாக இதன்போது பலரும் கருத்து தெரிவித்தனர்.

14355013_1052057201576947_4697507161678482700_n

LEAVE A REPLY