100 ஆவது தடவையாக சத்திர சிகிச்சைக்குள்ளான பௌஸியா யூசுப்

0
570

பாகிஸ்­தானைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது வாழ்க்­கையில் நூறு தட­வை­யாக சத்­தி­ர­சி­கிச்சை செய்­து­கொண்­டுள்ளார். 25 வய­தான பௌஸியா யூசுப், இந்த யுவ­தியின் 100 ஆவது சத்­தி­ர­சி­கிச்சை லாகூர் நக­ரி­லுள்ள ஷேக் ஸயீட் வைத்­தி­ய
சா­லையில் அண்­மையில் நடத்­தப்­பட்­டது.

இவர் சிறு வய­தி­லி­ருந்து “பைப்­ரோ­மேட்­டோசஸ் எனும் நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்ளார்.

“நான் இன்னும் பல சத்­தி­ர­சி­கிச்சை செய்­து­கொள்­வ­தற்கும் தயார். ஆனால், எனது இடது கையை துண்­டிப்­ப­தற்கு அனு­ம­திக்க மாட்டேன்” என பௌஸியா யூசுப் தெரி­வித்­துள்ளார்.

இவரின் இடது கையா­னது “பைப்­ரோ­மேட்­டோசஸ்” நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. “இந்நோய் உடலின் ஏனைய பாகங்­க­ளுக்குப் பர­வு­வதை தடுப்­ப­தற்­காக எனது இடது கையை துண்­டிக்க வேண்டும் என மருத்­து­வர்கள் கூறு­கின்­றனர்.

ஆனால், கையில்­லாமல் வாழ்­வ­தை­விட நான் இறப்­ப­தற்குத் தயார். வாழ்க்­கையில் நான் ஒரு போராளி. ஆனால், கையில்­லாமல் நான் வாழ விரும்­ப­வில்லை” என பௌஸியா யூசுப் கூறு­கிறார்.

“8 வயதில் எனக்கு முதல் தட­வை­யாக சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்­டது. வைத்­தி­ய­சா­லைகள், குறிப்­பாக ஷேக் ஸயீட் வைத்­தி­ய­சாலை, எனது இரண்­டா­வது வீடு போன்­ற­தாகும். இவ்­ வைத்­தி­ய­சா­லையில் எனக்குப் பலர் நண்­பர்­க­ளாகி விட்­டனர். அவர்கள் என் மீது அதிக அக்­கறை காட்­டு­கின்­றனர்” என அவர் தெரி­வித்­துள்ளார்.

5 பிள்ளைக் கொண்ட குடும்­பத்தில் இரண்­டா­வ­தாகப் பிறந்­தவர் பௌஸியா. இவரின் குடும்­பத்தில் ஏனைய பலரும் பல நோய்­களால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னராம்.

“எனக்கும் எனது குடும்­பத்­தி­ன­ருக்கும் மாதாந்தம் 15,000 பாகிஸ்தான் ரூபா (சுமார் 21 இலட்சம் இலங்கை ரூபா) மருத்­து­வத்­து­வத்­துக்­காக செலவாகுகிறது. இவ் விடயத்தில் எமக்கு உதவும் நன்கொடை யாளர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்” எனவும் பௌஸியா யூசுப் தெரிவித்துள்ளார்.

-Metro News-

LEAVE A REPLY