கிழக்கு மாகாண சுகாதார துறையை மேம்படுத்த மத்திய அரசாங்கத்தினால் பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது: பைஸால் காசீம்

0
226

(விசேட நிருபர்)

கிழக்கு மாகாண சுகாதார துறையை மேம்படுத்த மத்திய அரசாங்கத்தினால் பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சுதேசிய மருத்துவ பிரதியமைச்சர் பைஸால் காசீம் தெரிவித்தார்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துடனான சந்திப்பு நேற்று(19.9.2016) மாலை நடைபெற்ற போது அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மண்டபத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் பைஸால் காசீம் சுகாதாரத்துறை இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எமது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண ஆகியேர் சுகாதார துறையை முன்னேற்றுவதில் அபிவிருத்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருவதுடன் பெருமளவிளான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் மாகாண சபையின் கீழுள்ள வைத்தியசாலைகள் சுகாதார அலுவலகங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணத்தில் சுகாதார துறையை மேம்படுத்துவதில் எமது அமைச்சர் ராஜித அவர்கள் கரிசனை எடுத்து செயற்பட்டு வருகின்றார்.

அதே போன்று ஆயுர்வேத வைத்தியசாலைகளும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் அமைந்துள்ள யூணாணி வைத்தியசாலையை அபிவிருத்தி நான் முழு நடவடிக்கையையும் எடுப்பேன் என இதன் போது மேலும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் மற்றும் அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் எம்.நக்பர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர்.எம்.எஸ்.எம்.ஜாபிர், சம்மேளன தலைவர் பொறியியலாளர் எம்.எம்.தௌபீன் உட்பட சம்மேளன உறப்பினர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY