பல்கலைக்கழக அனுமதிக்காக 27603 மாணவர்கள் தெரிவு

0
355

பல்கலைக்கழக அனுமதிக்காக 27603 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான இசட் வெட்டு புள்ளி விபரங்கள் இன்றைய தினம் வெளியிடப்பட்டன.

இதன்படி, சுமார் 27603 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக தெரிவாகியுள்ளதாக பலக்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டை விடவும் இது 10 வீத உயர்வினை பதிவு செய்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

-GT-

LEAVE A REPLY