சந்திமாலின் வலது கையில் சத்திரசிகிச்சை

0
119

உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்­றின்­போது காயத்­திற்­குள்­ளான தினேஷ் சந்­தி­மாலின் வலது கையில் சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்­டுள்­ளது.

தற்­போது நடை­பெற்­று­வரும் வர்த்­தக கிரிக்கெட் சங்க போட்­டி­களில் ஒன்­றின்­போது சந்­திமால் காயத்­திற்­குள்­ளா னார். நேற்று முன்­தினம் இரண சிகிச்­சைக்­குள்­ளான அவர் மேலும் சில மருத்­துவ பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ளார்.

அதன் பின்னர் இலங்­கையின் சர்­வ­தேச கிரிக்கெட் சுற் றுப் ­ப­ய­ணங்­க­ளுக்கு அவர் அழைக்­கப்­ப­டு­வது குறித்து தெரி­வா­ளர்கள் தீர்­மா­னிப்பர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஸிம்­பாப்­வேக்கு அடுத்த மாதம் பயணம் செய்யும் இலங்கை கிரிக்கெட் அணி அதன் பின்னர் வருட இறு­தி யில் தென் ஆபி­ரிக்கா செல்­ல­வுள்­ளது. இலங்­கையின் இரு­பது 20 கிரிக்கெட் அணித் தலை­வ­ராக 2013 இல் நிய­மிக்­கப்­பட்ட சந்­திமால், 2014 உலக இரு­பது 20 போட்­டி­களின் நடுப்­ப­கு­தியில் அப் பத­வி­யி­லி­ருந்து சர்ச்­சைக்­கு­ரிய வகையில் நீக்­கப்­பட்­டி­ருந்தார்.

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக அண்­மையில் நிறை­வு­பெற்ற சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் நான்­கா­வது போட்­டி­யின்­போது அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் உபாதைக்குள்ளானதை அடுத்து அணியின் உதவித் தலை வர் சந்திமால் அணித் தலைமைப் பதவியை ஏற்றார்.

-Metro News-

LEAVE A REPLY