காணிப் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்

0
182

(அப்துல்சலாம் யாசீம்)

unnamed-3கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலள் காணி முரண்பாடு சம்மந்தமான 14 பிரச்சினைகள் இணங்காணப்பட்டு அவ் காணி பிரச்சினையுடன் சம்மந்தப்பட்டவர்களுக்கும் அது தொடர்பான அரச உயர் அதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று (20) திருகோணமலை சர்வோதய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

unnamed-4இந்த கலந்துரையாடலினை இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவும், யுசைட் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இதன் போது இரண்டு மாவட்டங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலய அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், காணி உத்தியோகத்தர் ,நிள அளவை அதிகாரிகள், வன விலங்கு அதிகார சபை அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

இதன் போது குறிப்பிட்ட காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வேண்டி காணி முரண்பாடு உள்ள இடங்களுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பிரசன்னமாகி உரிய தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டுமென தீர்மானம் எடுக்கப்பட்டது.

LEAVE A REPLY